பக்கம் எண் :

906
 
2645.நெடிய விசும்பொடு கண்ணே போற்றி

நீள அகல முடையாய் போற்றி

அடியும் முடியு மிகலிப் போற்றி

யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி

கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி

கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி

கடிய உருமொடு மின்னே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

10

அலந்தேனாகிய எனது வணக்கம்' என்க. நலிய - வருத்த, அலந்தேன் - வருந்தினேன்; "காவாய்' என்றதனை இறுதிக் கண் வைத்துரைக்க.

10. பொ-ரை: பெரும்பரப்புடைய வானகத்திற்கு இருப்பிடமாய், எப்பொருளின் நீள அகலங்களையும் தன்னுள் அடக்கியவனாய், உன் அடியையும், முடியையும் காண அரியும், அயனும் தம்முள் மாறுபட்டு முயன்றும் அறிய முடியாமல் அனற்பிழம்பாய் நின்றவனாய்க் கொடிய வலிய கூற்றுவனை உதைத்தவனாய், அடியேனுடைய உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாய், கொடிய இடியும் மின்னலும் ஆகியுள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

கு-ரை: 'விசும்பொடு கூடிய கண்' என்க. கண் - இடம்; எப்பொருட்கும் இடந்தந்து நிற்றலே விசும்பின் செயலாகும். நீள அகலம் உடையாய் - எப்பொருளின் நீள அகலங்களையும் நின்னுள் அடக்கியுள்ளவனே.

இகலி - (தம்முள்) மாறுபட்டு; தேடியவர் அரியும் அயனும் என்பது நன்கறியப்பட்டதாகலின் அவரைக் கூறாராயினார். "இகலிப் போற்றி" என்பதன் பின்னுள்ள, "போற்றி" என்பதனை, "நின்றாய்" என்பதன் பின் வைத்துரைக்க. 'இகலிபோற்றி' என்பதும் பாடம்.

ஒன்று - சிறிது; ஒன்றும் என்னும் முற்றும்மை தொகுத்தல் ஆயிற்று. அறியாமை - அறியாதபடி. வன் கூற்றம் - வலிய இயமன். உரும் - இடி.