| 2650. | உடலின் வினைக ளறுப்பாய் போற்றி | | | ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி | | | படருஞ் சடைமேல் மதியாய் போற்றி | | | பல்கணக் கூத்தப் பிரானே போற்றி | | | சுடரின் திகழ்கின்ற சோதீ போற்றி | | | தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி | | | கடலில் ஒளியாய முத்தே போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 4 |
வானில் உலவும் பிறை முடியனே! ஆலையில் பிழியப்படும் கருப்பஞ்சாற்றின் தெளிவே! அடியார் அமுதமே! காலையில் தோன்றும் இளஞாயிறே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: 'மாலை எழுந்த மதி, காலை முளைத்த கதிர்' என அவற்றது இயல்புகளை விதந்தோதியருளியது, உயிர்கட்கு அவை பயன்பட வைத்த அருட்டிறத்தினை நினைந்து. 'அறுப்பாய்' என எதிர்காலத்தால் அருளிச் செய்தமையின், "மேலை வினைகள்" எனப்பட்டன, இனித் தோன்றும் வினைகளேயாயின; இவற்றை 'ஆகாமியம்' என்ப. மேல் ஆடு - (கங்கைபோலக் கரந்து நில்லாது) மேல் நின்று விளங்கும். ஆலைக் கரும்பு - ஆலையில் இடப்பட்ட கரும்பு. அன்பினால் ஆரப்படும் இன்பம் ஆதலை, "அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய்" (தி.12 பெரிய. புரா. தடுத். 196.) எனறருளிச் செய்தார். "ஆரமுதம்" என்பது, 'அரிய அமுதம்' என்றாதலேயன்றி, 'ஆரப் படும் (நிறைய உண்ணப் படும்) அமுதம்' என்றும் ஆம். 4. பொ-ரை: உடலில் நுகரப்படும் வினைகளை அறுப்பவனே! எரியை ஏந்தி ஆடும் பிரானே! பிறையை அணிந்த சடையனே! பல பூதங்களோடு கூத்தாடும் பெருமானே! விளக்குப் போல ஒளிவிடுகின்ற சோதியே! என் உள்ளத்தில் தோன்றியிருப்பவனே! கடலில் ஆழ்ந்திருக்கும் முத்துப் போன்றவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: "உடலின் வினைகள்" என்பது, 'முருகனது குறிஞ்சி' என்பது போன்றது. 'உடம்பிற்கு உரிய வினைகள்' என்பது பொருள். இதனை, 'பிராரத்தம்' என்ப; அவற்றை அறுத்தலாவது, அவை உயிரைத் தாக்கி விருப்பு வெறுப்புக்களைத் தோற்றுவியாது, உடலூழாய்க் கழியும்படி, தான் முன்னின்றருளுதலும், அவை தம்மையும் மெலியவாய் வந்து பொருந்தச்
|