| 2655. | செய்யமலர் மேலான் கண்ணன் போற்றி | | | தேடியுணராமை நின்றாய் போற்றி | | | பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி | | | பொருளாக வென்னையாட் கொண்டாய் போற்றி | | | மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி | | | மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி | | | கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 9 |
கு-ரை: ஆறே - ஆறுபோன்றவனே; இஃது இறைவனது வரம்பிலின்பத்தினை வியந்தருளிச் செய்தவாறு. "ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்" என, திருமறைக்காட்டுத் திருப்பதிகத்திலும் (ப.23 பா.5) அருளிச் செய்தார். "பேராநோய் பேரவிடுப்பாய்" என்பதற்கு, 'தீராநோய் தீர்த்தருள வல்லான்" (ப.54 பா.8) என்பதற்கு உரைத்தது உரைக்க. ஊனம் - குறை; அது, பாசங்களின் வழிப்பட்டு, அவை அலைத்தவாறே அலைப்புண்டல். இதனை, "ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து" என்றருளிச் செய்தார் மெய்கண்ட தேவநாயனார். (சிவஞானபோ - சூ.8) அருகி - அரிதிற் கிடைக்கப்பட்டு. "யாரும் இகழப்படாதாய்" என்றது, 'உண்மை உணர்ந்தோர் யாரும்' என்னும் கருத்துப்பற்றி யாதலின், 'புத்தர் சமணர் முதலாயினோரால் இகழப்படுபவனன்றோ' என்னும் தடைநிகழாமை யுணர்க. இங்ஙனமாகவே, 'உண்மையாவது நின்னையன்றி இல்லை' என்றவாறாம். கருகுதற்கு, 'மேகம்' என்னும் வினைமுதல் வருவிக்க. பொழிந்து - பொழியப்பட்டு; 'பொழிய' எனத் திரிப்பினுமாம். 9. பொ-ரை: செந்தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாதவாறு நின்றவனே! விடத்தை உண்ட தவறாத அருள் வடிவே! என்னையும் ஒரு பொருளாக ஆண்டு கொண்டவனே! பஞ்சகவ்விய நீராட்டை விரும்புபவனே! சான்றோர்கள் புகழும் நற்குணனே! துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: செய்ய - செந்நிறத்ததாகிய. கண்ணன் - கரியவன்; திருமால். முதற்கண் நின்ற, "போற்றி" என்பதனை, இரண்டாவதுடன் கூட்டி அடுக்காக்கி யுரைக்க. அயனும் மாலும் தேடியது அகங்கரித்தன்றிப் போற்றியன்று ஆதலின், "போற்றித் தேடி" என்பது பாட மன்மை அறிக. 'பொய்யாப் பொறை' என இயையும், பொறை - அருள். "பொருளாக" என்புழி.
|