பக்கம் எண் :

918
 

57. திருக்கயிலாயம்

பதிக வரலாறு:

இத் திருப்பதிக வரலாற்றை268ஆம் திருப்பதிக வரலாற்றிற் காண்க.

போற்றித் திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 270

பதிக எண்: 57

திருச்சிற்றம்பலம்

2657.பாட்டான நல்ல தொடையாய் போற்றி

பரிசை யறியாமை நின்றாய் போற்றி

சூட்டான திங்கள் முடியாய் போற்றி

தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி

ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி

அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி

காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

1


1. பொ-ரை: மேம்பட்ட பாமாலை சூடியவனே! உன்தன்மை இன்னது என்று பிறரால் அறியப்படாதவனே! பிறையை முடியில் சூடியவனே! ஊமத்த மாலையை அணிந்தவனே! பஞ்ச கவ்விய அபிடேகத்தை விரும்புபவனே! பகைவருடைய முப்புரமும் எரியுமாறு நகைத்தவனே! யானையின் தோலை உரித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

கு-ரை: "பாட்டான தொடை" என்றது உருவகம். "நல்ல தொடை" என்றதனால், மலர் முதலியவற்றால் செய்யும் வழிபாட்டினும், பாட்டாற் பரவுதலே இறைவற்குப் பேருவகை செய்யும் என்பது பெறப்பட்டது; "பெருகிய சிறப்பின் மிக்க - அற்சனை பாட்டேயாகும்" (தி.12 பெரிய புரா. தடுத்தாட். 70) என, இறைவன் தானே அருளிச் செய்தமை கூறப்பட்டது காண்க. இதுபற்றியே, 'பன்மாலைத் திரளிருக்கப்பாமாலைக் கேபட்சம் பரமற்கு" என்றருளினார், தாயுமான அடிகள் (பன்மாலை. 1) பரிசு - உண்மை நிலை. சூட்டு -கண்ணி. "தூமாலை" யாவது கொன்றை மாலை என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது; 'அதனோடு மத்தம் அணிந்தாய்' என்க. மத்தம் - ஊமத்தை. ஆட்டு - ஆட்டப்படும் பொருள். 'ஆட்டாக' என