| 2659. | செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி | | | செல்லாத செல்வ முடையாய் போற்றி | | | ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி | | | ஆகாய வண்ண முடையாய் போற்றி | | | வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி | | | வேளாத வேள்வி யுடையாய் போற்றி | | | கையார் தழலார் விடங்கா போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 3 |
3. பொ-ரை: செம்மை கருமை வெண்ணிறம் இவற்றை உடையவனே! நீங்காத செல்வம் உடையவனே! வியக்கத்தக்கவனே! பெரிய பொருள்களும் சிறிய பொருள்களும் ஆகியவனே! ஆகாயத்தின் தன்மை உடையவனே! தீயோருக்கு வெப்பமும் அடியார்க்குக் குளிர்ச்சியும் அண்மையுமாய் உள்ளவனே! ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் அருட் சக்தியை உடையவனே! அனல் ஏந்திய அழகனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: 'செம்மை, கருமை, வெண்மை' என்னும் மூன்றுமே முதல் நிறங்களாதல் பற்றியும் அவை முறையே இராசத தாமத சாத்துவிக குணங்களைக் குறிக்கும் குறிப்புக்களாதல் பற்றியும், 'எல்லாப் பொருளுமாயினவன்' என்பார், அவற்றை வகுத்தோதி யருளினார். செல்லாத - நீங்காத, நீங்காத செல்வமாவன தன்வயத்தனாதல் முதலிய குணங்கள். ஐ - வியப்பு; தலைமையுமாம். வண்ணம் - தன்மை. ஆகாயத்தின் தன்மையாவது, அருவாதலும், எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கி நிற்றலுமாம். இவ்வாறாதல் பற்றியே இறைவனது குணத்தினை, "சிதாகாசம், அருள்வெளி' என்பன போன்ற சொற்களாற் குறிப்பர். இப்பெற்றி நோக்கியே, 'விசும்பு மெய்யாக' (நற்றிணை - கடவுள் வாழ்த்து). என, இறைவற்கு ஆகாயத்தை உடம்பாகக் கூறினார், சான்றோர் எனத் தைத்திரீய உபநிடதமும் கூறும். வெய்யாய் - வெம்மை உடையவனே. தணியாய் - தண்மை யுடையவனே. அண்மை. 'அணிமை' எனப் படுதல் போல, தண்மை. 'தணிமை' எனப்பட்டது; "வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா' என, ஆளுடைய அடிகளும் அருளினார். (தி.8 திருவா. சிவபு.36) அணியாய் - அண்மையில் உள்ளவனே. இங்ஙனம் அருளியவாற்றால் அணிமையின் மறுதலைபற்றி 'சேயாய்' என்பதுங் கொள்ளப்படும். "செய்யாய் கரியாய்" என்றது முதலிய பலவற்றால், ஒன்றொடொன்று ஓவ்வாப் பொருள்கள் பலவும் தான் ஒருவனேயாய் நிற்கும்
|