| 2660. | ஆட்சி யுலகை யுடையாய் போற்றி | | | அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி | | | சூட்சி சிறிது மிலாதாய் போற்றி | | | சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி | | | மாட்சி பெரிது முடையாய் போற்றி | | | மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி | | | காட்சி பெரிது மரியாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 4 |
அதிசயநிலை அருளிச் செய்யப்பட்டது; "செல்லாத செல்வம், வேளாத வேள்வி" என்றருளியனவும் அன்ன, வேளாத வேள்வி - ஓம்பாதே நிலைபெற்றிருக்கும் வேள்வி; என்றது அருட்சத்தியை. அது, சிவபிரானைப் பயன்கருதியும் கருதாதும் வழிபடுவோர்க்குத் தூய்தான உலகப் பயனையும், வீடுபேற்றையும் தரும் என்பதனை, தூய்தல்லாத உலகப் பயனைத்தரும் வேள்விகளிலே மனஞ்செல் வார்க்கு அறிவுறுத்தற்பொருட்டு, வேள்வியாக அருளிச் செய்தார். தூய்தன்மை மயக்கஞ் செய்தலும், தூய்மை அது செய்யாமையுமாம். இன்னும் தேவர்க்குக் கொடுக்கும் அவியுணவுகளை வேள்வித் தீ வழியாகக் கொடுத்தல் போல, சிவபிரானுக்கு நிவேதிக்கும் நிவேதனங்கள் அனைத்தும் அவனது அருட்சத்தி வழியாகவே நிவேதிக்கப் படுதலின், அதனை அவ்வாறருளிச் செய்தற்கு இயைபுண்மை யறிக. இது பற்றியே, சிவபிரானுக்கு வேள்வித் தீ வழியாகக் கொடுக்கு மிடத்தும் சிவாக்கினி வழியாகவே கொடுத்தல் சிவநெறி முறைமை யாயிற்று, இதனானே, சைவவேள்வி, பூதாக்கினியையே வளர்க்கும் வைதிக வேள்வி போலாது, சிவாக்கினியை வளர்க்கும் வேள்வியாத லறிக. சிவாக்கினியைப் பிறப்பிக்கும் முறை, அதனை வளர்க்கும் முறை முதலியவெல்லாம், பிரமாணங்கள் முதலியவற்றினன்றிச் சைவாகமங்களிலே அறியப்படுவனவாம். 'கையின்கண்' என உருபு விரிக்க. "ஆர்" இரண்டனுள் முன்னது மிகுதியையும், பின்னது பொருந்துதலையும் குறித்தன. 'ஆரழல்' என்பதே பாடம் என்றலுமாம். விடங்கன் - வீரம் உடையவன். 4. பொ-ரை: உலகை ஆள்பவனே! அடியார்களுக்கு இன்பம் அளிப்பவனே! சிறிதும் வஞ்சனை இல்லாதவனே! கடல் விடம் உண்டவனே! மேம்பட்ட மாண்புகளை உடையவனே! என் உள்ளத்துள் நிலைபெற்றிருப்பவனே! தம்முயற்சியால் யாரும் காண்டற்கு அரியவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.
|