| 2661. | முன்னியாய் நின்ற முதல்வா போற்றி | | | மூவாத மேனி யுடையாய் போற்றி | | | என்னியா யெந்தை பிரானே போற்றி | | | யேழி னிசையே யுகப்பாய் போற்றி | | | மன்னிய மங்கை மணாளா போற்றி | | | மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி | | | கன்னியார் கங்கைத் தலைவா போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 5 |
கு-ரை: "அமுதெலாம்" எனப் பன்மை கூறியவதனால், "அமுது" என்றதற்கு, 'இன்பம்' எனப் பொருளுரைத்துக் கொள்க. சூட்சி - வஞ்சனை. 'சூழ்ச்சி' என்பது, மருவிநின்றது. மாட்சி - பெருமை, காட்சி - அறிதல், சிவபிரானது புகழ்ப்பாடல்களாவன யாவற்றுள்ளும் அவனது எண்குணங்கள் ஏற்றபெற்றியாற் பெறப்படுமாயினும், இத்திருத்தாண்டகத்துள், அவனது எண்குணங்களும் பெறப்படும். அஃதாமாறு காட்டுதும்: ஆட்சியால் தன்வயமும், அமுதினால் வரம்பிலின்பமும், சூட்சி சிறிதுமின்மையால் இயல்பாகவே பாசங்களின் நீங்குதலும், நஞ்சமுண்டமையால் பேரருளும், பெரிதாய மாட்சியால் முடிவிலாற்றலும், அடியவரது சிந்தையினின்று அறிவித்தலால் இயற்கை யுணர்வும், காட்சிக் கருமையால் தூய உடம்பும், கயிலைமலையிருக்கையால் முற்றுணர்வும் பெறப்படுதலை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. மலைமேல் நின்றார்க்கு எல்லாப் பொருளும் தோன்றுதலால், கயிலைமலை யிருக்கையால் முற்றுணர்வுடைமை பெறப்படும் என்க. எனவே, இஃதோர் அரும்பெறற் றிருப்பாடலாத லுணர்க. 5. பொ-ரை: தவக்கோலம் பூண்ட முதல்வனே! மூப்படையாத திருமேனியனே! எனக்குத் தாயும் தந்தையும் ஆயவனே! ஏழிசையை விரும்புபவனே! உன்னோடு கூடிய பார்வதியின் துணைவனே! மந்திரமும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களும் ஆனவனே! என்றும் அழிவில்லாத கங்கைக்குத் தலைவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: 'முனியாய்' என்பது, "முன்னியாய்" என விரித்தல் பெற்றது; பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை - முனியாய் (தி.5. ப.96. பா.3.) எனத் திருக்குறுந்தொகையில் அருளிச் செய்தமை காண்க. 'தவக்கோலம் உடையவனே' என்பது பொருள். இனி, இயல்பாகவே கொண்டு,
|