பக்கம் எண் :

923
 
2662.உரியா யுலகினுக் கெல்லாம் போற்றி

உணர்வென்னும் ஊர்வ துடையாய் போற்றி

எரியாய தெய்வச் சுடரே போற்றி

யேசுமா முண்டி யுடையாய் போற்றி

அரியா யமரர்கட் கெல்லாம் போற்றி

அறிவே யடக்க முடையா போற்றி

கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

6


'எல்லாவற்றையும் நினைப்பினாற் செய்பவனே' என்று உரைத்தலுமாம். 'என்' எனவும், 'யாய்' எனவும் வந்த சொற்கள் 'என்னியாய்' என இகரம் பெற்றுப் புணர்ந்தன. யாய் - தாய். "என்" என்பது "எந்தை பிரான்" என்பனவற்றோடும் இயையும். 'யாய், எந்தை' என்பனவும் விளிப்பெயர்கள் என்க. "இசையே" என, பிறவற்றை உகவாதான் போலப் பிரிநிலையேகாரம் புணர்த்தோதினார், அதன்கண் உள்ள விருப்பமிகுதி புலப்படுத்தற் பொருட்டு; 'பூம்புகலி - வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே' (தி.2. ப.54. பா.8.) என்றதுபோல. இசையில் இறைவற்கு உள்ள விருப்ப மிகுதியை, "அளப்பில கீதஞ்சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே" என்றும் சுவாமிகள் உணர்த்தியருளினார்கள். (தி.4. ப.77. பா.3.) தந்திரம் - ஆகமம். "கன்னி" என்றது தென்றிசைக் குமரித் தீர்த்தத்தை; ஆர் கங்கை - நிறைந்த கங்கைநதி. 'இவ்விரண்டிற்கும் ஒருவனே தலைவன்' என்றருளியவாறு. "கங்கை" என்பதற்கு 'கங்காதேவி' எனப் பொருளுரைப்பின், "கங்கையார்" என்னும் பன்மையோடியையாமையும், தகரம் மிகுதல் பொருந்தாமையும் அறிக.

6. பொ-ரை: எல்லா உலகிற்கும் உரிமை உடையவனே! உன் கருத்தறிந்து செயற்படும் காளையை வாகனமாக உடையவனே! எரி போன்ற அருள் விளக்கே! பிறர் இகழுமாறு மண்டை யோட்டினை ஏந்தினவனே! தேவர்கள் அணுகுவதற்கு அரியவனே! அறிவு வடிவானவனே! நுண்ணியனே! ஒரு காலத்தில் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

கு-ரை: "உரியாய்" என்றது 'உடையவனே' என்றவாறு; "உலகினுக்கு" என, உயர்திணைக் கிழமைக்கண் அது உருபுவாராது குவ்வுருபு வந்தது. விடையூர்தியாவது உயிரேயாதலின், 'உணர்வென்னும் ஊர்வதுடையாய்'