| 2663. | எண்மேலும் எண்ண முடையார் போற்றி | | | யேறறிய வேறுங் குணத்தாய் போற்றி | | | பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி | | | பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி | | | விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி | | | மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி | | | கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 7 |
என்றருளினார், அறமேயன்றி உயிரும் ஊர்தியாமென்பதுணர்க. எரியாய - எரிபோன்ற. தெய்வச்சுடர் - அருள் விளக்கு. ஏசும் - இகழப்படுகின்ற. முண்டி - தசை நீங்கிய தலை, 'அதனைக் கையில் உடையவன்' என்க. "போற்றி" என்பதனை, "அறிவே" என்பதனோடுங் கூட்டுக. அறிவு - அறிவே வடிவம் ஆனவன். அடக்கம் - நுணுகியிருத்தல்; "நறுமல ரெழுதரு நாற்றம் போல் - பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்" (தி.8 திருவா. அதிசயப் - 9.) என்பதுங் காண்க. கரியான் - திருமால். ஆழி - சக்கரம். 7. பொ-ரை: உயிர்களுடைய எண்ணங்களுக்கு மேற்பட்ட எண்ணங்களை உடையவனே! உயிர்களைக் கரையேற்றும் பொருட்டு மேம்பட்ட குணங்களை உடையவனே! பண்ணிடத்திலே விருப்பம் கொண்டு பண்ணோடு யாழினையும் வீணையையும் இசைக்கின்றவனே! வானத்தையும் கடந்து ஓங்கியிருப்பவனே! மேலோருக்கெல்லாம் மேலோனே! இரு கண்களுக்கு மேலே மூன்றாவதான நெற்றிக் கண்ணை உடையவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: "எண்" என்றது, உயிர்களது எண்ணத்தினை. "மேல்" என்பது ஏழனுருபு; "உம்மை" நுணுக்கத்தினது மிகுதியுணர்த்தலின், சிறப்பு. எண்ணம் - எண்ணுதல். அறிய - பலரும் பார்க்க. 'அரிய' என்பது பிழைபட்ட பாடம். குணம் - இயல்பு. பாவித்து - நினைத்து; விருப்பங் கொண்டு. இதனை வலியுறுத்தற்கு. யாழும் வீணையும் பயிறலை அருளிச் செய்தார். "விண்ணின் மேலும், அதற்கு மேலும்" என்க. "விண்" என்றது, பிருதிவி அண்டத்தை "மேலார் கண் மேலார் கண் மேலாய்" என்றதனை மேலே காண்க. "கண்மேலுங் கண்ணொன்றுடையாய்" என்பதனை, "கண்மேற் கண்ணும் சடைமேற் பிறையும் உடையார்" (தி.1. ப.67. பா.2.) என்பதனோடு வைத்துக் காண்க.
|