| 2664. | முடியார் சடையின் மதியாய் போற்றி | | | முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி | | | துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி | | | சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி | | | அடியார் அடிமை அறிவாய் போற்றி | | | அமரர் பதியாள வைத்தாய் போற்றி | | | கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி | | | கயிலை மலையானே போற்றி போற்றி. | 8 |
| 2665. | போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி | | | புண்ணியனே நண்ண லரியாய் போற்றி | | | ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி | | | எண்ணா யிரநூறு பெயராய் போற்றி | |
8. பொ-ரை: சடையில் பிறை சூடி, திருநீறு பூசிய மூர்த்தியே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! தம் முயற்சியால் அறிய முற்படுபவர் காணமுடியாதபடி இருப்பவனே! அடியவர்களின் அடிமைத் தன்மையின் உண்மையை அறிபவனே! அவர்களைத் தேவருலகை ஆளவைப்பவனே! காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல. கு-ரை: 'முடியாக ஆர்ந்த சடை' என்க. முழுநீறு - நீற்றின் இலக்கணம் சிதையாது நிரம்பிய நீறு; மேனியின் முழுமை நீற்றின்மேல் ஏற்றப்பட்டது எனினுமாம். சண்ணித்தல் - பூசுதல். சோதித்தார், அயனும் மாலும். "அறிவாய்" என்றது, 'பிறரறியாதொழியினும் அறிந்து அருள் செய்பவனே' என்றதாம்; இதனை நாயன்மாரது வரலாறுகளிற் காண்க. 'அடியார்' என முன்னே அருளினமையின், வாளா, "அமரர் பதியாள வைத்தாய்" என்றார். கடியார் - கொடியவர். 9. பொ-ரை: அடியார்கள் வணக்கம் சொல்லித் திருவடிகளை வழிபடுமாறு இருப்பவனே! புண்ணியனே! முயற்சியால் அணுக அரியவனே! இடி ஒலிக்கும் வான்மேல் இருப்பவனே! எண்ணிறந்த பெயர்களை உடையவனே! நான்கு திசைகளுக்கும் ஒலி வழங்கும் தலைவனே!
|