பக்கம் எண் :

926
 
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி

நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி

காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.

9

* * * * * * * * *

10

திருச்சிற்றம்பலம்


பிரமனுக்கும் திருமாலுக்கும் உள்ளவாறு உணர்தற்கு அரியவனே! காற்று இயங்கும் திசைகளுக்கெல்லாம் காரணனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

கு-ரை: 'போற்றி இசைத்து' என்பது, "போற்றிசைத்து" என நின்றது; இதனுள், "போற்றி" என்னுஞ்சொல் தன்னை உணர நின்றது. இசைத்து - சொல்லி; இதனானே, 'அவ்வாறு பரவுதல் செய்தற்பாற்று' என்பது பெறப்பட்டது. 'ஏறு' என்பது, "ஏற்று" என விரித்தலாயிற்று; 'இடி' என்பது பொருள். "ஏற்றிசைக்கும் வான்" என்றது, 'மேகம்' என்றவாறு. அதன்மேல் இருத்தலாவது, அதற்குத் தலைவனாய் நின்று அதனை நடத்துதல். இனி, இது, நாயனாருக்குக் கயிலை மலை வழியில் இறைவன் விண்ணிலே மறைந்தருள் புரிந்தமையைக் குறித் தருளியதூஉ மாம். (தி.12 பெ. பு. திருநாவு. 368) எண் - எண்ணப்படுகின்ற. "ஆயிரத் தெட்டும் நூற்றெட்டுமாகச் சொல்லப்படும் பெயர்களை உடையவன்" எனவும் பொருள் உரைப்பர்; அஃது அத்துணைப் பெயர்களால் அருச்சிக்கும் மரபு பற்றியதாம். போற்றித் திருப்பாடல்கள் பலவற்றின் இறுதிக்கண் இவ்வாறருளிச் செய்தமை, அவைகளை முடித்தற் குறிப்புணர்த்தும். விளக்குப் போல எல்லாவற்றையும் புலப்படுத்துதலின், "விளக்காய நாதா" என்றருளினார். காற்று இசைக்கும் - காற்று ஒலிக் கின்ற என்றது, காற்றில்லாத திசைக்கெல்லாம்" என்றருளிச் செய்தார். "வித்து" என்றது 'காரணன்' (தலைவன்) என்னும் பொருளது.

இத்திருப்பதிகத்திற் கிடைத்த திருப்பாடல்கள் இவ்வளவே.

இக்கயிலாயப் போற்றித் திருப்பதிகங்களுள் பலவிடத்தும், இறைவன் தமது சிந்தனையின்கண் நின்றமையை வலியுறுத்தருளிச் செய்தது, கயிலைபோல, உடம்பிற் கயிலை உள்ளம் என்பது உணர்த்துதற் பொருட்டென்க.