58. திருவலம்புரம் பதிக வரலாறு: ஆண்டவரசு, சீகாழியிலிருந்து திருக்கோலக்காவை வணங்கி ஆளுடைய பிள்ளையாரிடம் விடைகொண்டு திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை, திருநின்றியூர், திருநனிபள்ளி, முதலான தலங்களைப் பணிந்து திருச்செம்பொன்பள்ளி செல்லுங்கால் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 189) குறிப்பு: இத்திருப்பதிகம், திருவலம்புரப் பெருமான் திருவீதியில் வந்தபொழுது அவரைக்கண்டு காதல்கொண்டு பின்தொடர்ந்து சென்று அவரை அணுக இயலாது வருந்தும் ஒருத்தியின் கூற்றாக அருளிச் செய்யப்பட்டது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 271 | பதிக எண்: 58 |
திருச்சிற்றம்பலம் | 2666. | மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை | | | மறையவனும் வானவருஞ் சூழ நின்று | | | கண்மலிந்த திருநெற்றி யுடையார் ஒற்றை | | | கதநாகங் கையுடையார் காணீ ரன்றே | | | பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம் | | | பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல | | | மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி | | | வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 1 |
1. பொ-ரை: உலகத்தை அளந்த நீலமணி நிறத்தவரான திருமாலும் பிரமனும் தேவர்களும் தம்மைச் சூழ, நெற்றிக்கண்ணராய், ஒற்றைப் பாம்பினைக் கையில் உடையவராய், இனியமொழிகளையுடைய மற்றப் பெண்களும் யானும் பணிந்து வணங்கித் தம்பின்னே செல்லவும், மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளையுடைய வலம்புர நகரில் புகுந்து, பெருமான் அங்கேயே தங்கிவிட்டார்.
|