| 2668. | தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை | | | யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர் | | | ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல | | | வருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும் | | | நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந் | | | துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி | | | வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி | | | வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 3 |
3. பொ-ரை: திருமேனியின் ஒரு பகுதி தீயின் நிறமாகவும், மற்றைப்பகுதி திருமாலின் நிறமாகவும் விளங்கித்தோன்ற, ஆக்கூரிலுள்ள தான்தோன்றி மாடத்திற்குச் செல்பவரைப்போல யான் அப்பக்கம் சென்ற அளவில் ஓரிடத்தையும் நோக்காமல், பூணூலும் மான் தோலும் பொருந்திய தம் மேனியில் வெள்ளிய நீறு பூசி, வேதக் கருத்துக்களை விரித்து, மாயமாகச் சில பேசிய வண்ணம், வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே. கு-ரை: தீக்கூரும் - நெருப்பு மிக்கெரிவது போலும். 'திருமேனி ஒருபால்' என்புழியும் உம்மை விரிக்க. "அரிஉருவம் ஒருபாலும்" என மாற்றுக. ஒருபால் தம்முருவமும், ஒரு பால் அரி - (திருமால்) உருவமுமாக நிற்பவரை, 'சங்கர நாராயணர்' என்பர். இந்நிலை, படைப்புக்காலத்தில் திருமாலை இடப்பாகத்தில் தோற்றுவித்து, அவர்வாயிலாகப் பிரமனைத் தோற்றுவித்து, அவன் வாயிலாக உலகங்களைத் தோற்றுவித்தலைக் குறிப்பதாம். ஆக்கூர், சோழ நாட்டுத்தலம்; இதன்கண் இறைவர் சுயம்பு மூர்த்தியாய் இருத்தலின், 'தான்றோன்றி' எனப்படுவர்; அப்பெயர், அவரது திருக்கோயிலுக்கும் ஆயிற்று. அது மாடக்கோயிலாதலால், 'தான்றோன்றிமாடம்' எனவும், வழங்கப்படும். 'அங்குப்போவார் போலக்காட்டி எம்மை அலைவித்தார்' என்றாள். அப்பால் - அதன் பின். எத்திசையிலும் 'ஓரிடத்தும்' என்பது, "ஒருவிடத்தும்" என வந்தது செய்யுள் விகாரம். வருகின்ற திருப்பாடல்களுள் இவ்வாறு வருவனவும் அவை 'ஒருவிடத்தும் நோக்காராய்' என்க. நூலும் தோலும் பிரமசாரியாதலை விளக்குவன. துதைந்து - நிறைந்து;
|