| 2669. | மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி | | | மூவர் உருவாய முதல்வ ரிந்நாள் | | | கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த | | | குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே | | | போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப் | | | புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ | | | வாவா வெனவுரைத்து மாயம் பேசி | | | வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 4 |
இதனை, 'துதைய' எனத் திரிக்க. மாயம் - பொய்: 'மறைவிரிக்கின்ற வாயால் மாயம் பேசினார்' எனப் புலந்து கூறினாள். 'வாயம்பேசி' எனவும் பாடம் ஓதுவர், 'செல்வர் ஒருவர்' என எழுவாய் கொள்க. 4. பொ-ரை: மூப்படையாத கொடிய பாம்பை அரையில் கட்டி, மும்மூர்த்திகளின் உருவமாக உள்ள முதற்கடவுளாம் சிவபெருமான், வேறுயாரும் இணைக்க முடியாத அக்கினியாகிய அம்பினை வில்லில் கோத்த இளையராய்க், குளிர்ந்த கொன்றைப் பூவைச்சூடி, இன்று இங்கே போகின்றவரைக் கண்டு அடியேன் பின்னே செல்ல, என்னைப் புறக்கணித்து, என்னை வாவா என்று பொய்யாக அழைத்துவிட்டுத் தம்முடைய பூதகணம் தம்மைச் சூழ, வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே. கு-ரை: இறைவனை அடைந்த பொருள்களும் என்றும் ஒரு பெற்றியவாய் நீடு வாழ்தலின், பாம்பும் மூவாதாயிற்று; "இளநாகம்" (தி.1. ப.1. பா.2.) என்றருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும். பிறையும் அன்னதாதலுணர்க. 'மூர்க்கப் பாம்பு' என்பது, 'மூக்கப் பாம்பு' என மருவிற்று. "மூர்க்கப் பாம்பு" என்றேயும் பாடம் ஓதுப. இஃது இன அடை. மூவர், 'அயன், அரி, அரன்' என்பவர். முதல்வர் - தலைவர். கோவாத கணை - வில்லில் தொடுக்கப் படாத (அம்பின் தன்மை யில்லாத) அம்பு: என்றது, 'திருமால், வாயுதேவன், அக்கினி தேவன்' என்ற இவர்களே அம்பாய் அமைந்தமை பற்றி. எரிகணை - எரிக்கின்ற கணை. 'குழகனாராய்ப் போவாரை' என்க. உடன்கொண்டு செல்லாது ஒளிந்தமையின். "வா வா" என உரைத்ததனை "மாயம்" (பொய்) என்றாள். "உரைத்து, பேசி" என்றவற்றை, "செல்ல" என்ற தன் பின்னர்கூட்டி, 'அவர்' என எடுத்துக்கொண்டுரைக்க.
|