| 2672. | பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் | | | பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ | | | இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் | | | கெவ்வூரீர் எம்பெருமா னென்றே னாவி | | | விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி | | | வேறோர் பதிபுகப் போவார் போல | | | வட்டணைகள் படநடந்து மாயம் பேசி | | | வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 7 |
| 2673. | பல்லார் பயில்பழனம் பாசூ ரென்று | | | பழனம் பதிபழமை சொல்லி நின்றார் | | | நல்லார் நனிபள்ளி யின்று வைகி | | | நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார் | |
கு-ரை: முறித்தது - உரித்தது. முண்டம் - தலைமாலை. "முற்றம்" என்றது, முன்றிலை. 'சிறுமுறுவல் செய்தவர்' மறித்து ஒருகால் நோக்காதே போயினார் என வருந்தினாள். 7. பொ-ரை: பட்டினை உடுத்துப் பவளம் போன்ற தம் மேனியில் பசிய சந்தனம் பூசித் தம் திருவடிகளை ஊன்றியும் தூக்கியும் கூத்தாடிக் கொண்டு என்னிடம் வந்தாராக. யான் 'எம்பெருமான் நீர் எவ்வூரைச் சேர்ந்தவர்' என்று வினவ என் உயிர்போகுமாறு என்னை விரைந்து பார்த்து, எனக்கு காமமீதூர்வினை வழங்கி, வேறோர் ஊருக்குச் செல்பவரைப்போலப் பொய் பேசிச் சுழன்று நடந்து, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே. கு-ரை: பசுஞ் சாந்து - குளிர்ந்த சந்தனம். "பாதம் இட்டு (ஊன்றி எடுத்து (தூக்கி)" என்றது, நடனம் ஆடிய வகையை விரித்த வாறு. "எம்பெருமான்" என்றது, பன்மை யொருமை மயக்கம். 'ஆவி (உயிர்) விடுமாற்றினைச் செய்து' என்க. அது, பகுதிப்பொருள் விகுதி, 'ஆவி விடுமாறாவது, காமம் மீதூர்வு. விரைவு, போகவேண்டுங் குறைபற்றித் தோற்றுவித்தது. வட்டணைகள்பட - சுழற்சி தோன்ற. 8. பொ-ரை: பலரும் தங்கியிருக்கும் திருப்பழனம், பாசூர் என்று தம் ஊர்களைக் குறிப்பிட்டு, அவற்றுள் பழனப்பதியில் தமக்கு உள்ள
|