| சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச் | | | சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு | | | மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி | | | வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 8 |
| 2674. | பொங்கா டரவொன்று கையிற் கொண்டு | | | போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர் | | | தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந் | | | தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர் | | | எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா | | | என்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி | | | மங்குல் மதிதவழும் மாட வீதி | | | வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. | 9 |
பழந்தொடர்பைக்கூறி, நல்லவர்கள் மிக்க நனிபள்ளியில் இன்று தங்கி, மறுநாள் நள்ளாறு போய்ச் சேர எண்ணியுள்ளதாகக்கூறினார். இன்ன இடத்துக்குப் போகப்போவதாக உறுதியாய்க் கூறாமல், திருநீறு பூசிய அழகியராய்த் தம் கைகளை வீசிக் கொண்டு, வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளை உடைய வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார். கு-ரை: பழனம், சோழநாட்டுத் தலம். பாசூர், தொண்டை நாட்டுத் தலம். பழனத்தை முன்னர்க் கூறினமையால் அதன் பழமை கூறியதாயிற்று. 'பழனம் (தமக்குப்) பதியாதல் பழமையாதலைச் சொல்லி நின்றார்' என்க. நனிபள்ளி, நள்ளாறு சோழநாட்டுத் தலங்கள். முன்னே இரண்டு ஊர்களைச் சொல்லி. பின்பு, இன்று, ஓர் ஊரிலும், நாளை ஓர் ஊரிலும் இருப்பதாகக் கூறினமையின், 'ஓரிடமாகச் சொல்லிற்றிலர்' என்றால். 'தோளும் கையும் வீசி', என்க. 'எங்கும் அல்லாராய்' என. மோனை நயம் கருதாதே பிரித்து, 'முன்சொல்லிய எவ்விடத்தும் செல்லாராய்' என்றே உரைக்க. 'மல் ஆர் வயல்' எனப் பிரித்தலுமாம். மல் - வளம். 9. பொ-ரை: படமெடுத்து ஆடும் பாம்பு ஒன்றனைக் கையில் கொண்டு, மறுகையில் போரிடும் மழுப்படையை ஏந்தி, ஓரிடத்தும் தங்காராய்ப் போய்க்கொண்டே, தம்மிடத்து மற்றவர் கொள்ளும் விருப்பத்தை நீக்காராய் மெய்ப்பொருளிடத்தே நிற்பவராகத் தம்மைக் கூறிக்கொண்டே
|