பக்கம் எண் :

934
 
2675.செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்

சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்

பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற

போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ

அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி

யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்

வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி

வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.

10

திருச்சிற்றம்பலம்


ஒன்றோடொன்று பொருந்தாத செயல்களை உடையவராய், என்கண்களை விட்டு நீங்காத தம் இனிய வேடத்தைக் காட்டி, வானத்திலுள்ள சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாட வீடுகளைக் கொண்ட வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.

கு-ரை: பொங்கு - சினம் மிக்க. வெண்மை, கூர்மையைக் குறிக்கும். தத்துவம் - உண்மை. ஒன்றொன்று ஒவ்வா - ஒன்றோ டொன்று ஒவ்வாது, முரணி நிற்கின்றன. "எங்கே" என்பதனை, "ஒவ்வா" என்பதன் பின்னர்க்கூட்டி, 'அவை எத்தன்மையன' என்றுரைக்க. 'எத்தன்மையன' என்னும் வினா 'ஒன்றினும் படாப் பித்தர் செய்கையாம்' என்பது தோற்றி நின்றது. 'இச் செய்கைதாமே காதலை வளரச்செய்யா நின்றது' என்பது, "என் கண்ணின் நின்றகலா வேடங்காட்டி" என்றதனால் இனிது பெறப்படும்.

10. பொ-ரை: திருமால் வில்லை ஏந்திக் குரக்குச்சேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கயைச் சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து, தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்கிரீவன், வீடணன் முதலியோர் உதவியதால் அரிதில் வென்றழித்த இராவணனுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான். அப்பெருமானார், இன்று கப்பல்கள் நிறைந்த கடலால் ஒருபுறம் சூழப்பட்டதாய், மாடவீதிகளை உடைய வலம்புரம் என்ற ஊரை அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார்.

கு-ரை: செங்கண் மால் அரிதின் வென்றமையை நினைவாள், சிலை பிடித்தமை முதலியவற்றை எடுத்துக் கூறினாள். புகல் - அடைக்கலம்; என்றது,