| 2677. | நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும் | | | நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும் | | | பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும் | | | பூந்துருத்தி நகர்மேய புராண னாரும் | | | மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும் | | | வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும் | | | விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும் | | | வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 2 |
| 2678. | கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங் | | | கரிகாட்டில் எரியாடுங் கடவு ளாரும் | | | பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும் | | | பரவுவார் பாவங்கள் பாற்று வாரும் | | | செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த | | | திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும் | | | மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித் தாரும் | | | வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 3 |
2. பொ-ரை: செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும், நெற்றிக் கண்ணரும், பார்வதி பாகரும், பூந்துருத்தியில் உறையும் பழையவரும், யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாச் சூடியவரும், வளைகுளம், மறைக்காடு இவற்றில் தங்கியவரும், தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார். கு-ரை: பூந்துருத்தி, மறைக்காடு (வேதாரணியம்) இவை சோழநாட்டுத் தலங்கள். மருப்பு - யானைக் கொம்பு. வளைகுளம், வைப்புத்தலம். 3. பொ-ரை: வெண்ணி அமர்ந்துறையும் விகிர்தனார், கையில் முத்தலைச் சூலம் ஏந்தினாரும், சுடுகாட்டு நெருப்பில் கூத்து நிகழ்த்தும் கடவுளும், படமெடுக்கும் பாம்பினை ஆட்டுபவரும், தம்மை
|