| 2679. | சடையேறு புனல்வைத்த சதுர னாருந் | | | தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும் | | | உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி | | | யுண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும் | | | மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த | | | மயிலாடு துறையுறையும் மணாள னாரும் | | | விடையேறு வெல்கொடியெம் விமல னாரும் | | | வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 4 |
| 2680. | மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி | | | மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும் | | | பண்ணிலங்கு பாடலோ டாட லாரும் | | | பருப்பதமும் பாசூரும் மன்னி னாரும் | |
வழிபடுகின்றவர்களின் பாவத்தை அழிப்பவரும், கயல் மீன்கள் பாயும் வயல்களை உடைய திருப்புன்கூர் மேவிய செல்வரும், உடல்முழுதும் வெண்ணீறு பூசியவரும் ஆவர். கு-ரை: கரிகாடு - கரிகின்ற காடு; சுடலை. பை உலாம் - படம் பொருந்திய. பாற்றுவார் - அழிப்பார். செய் - வயல்; 'செய்க்கண் பாய' என்க. "வயல்கள்" என்பது, 'அவைகள்' என்னும் சுட்டளவாய் நின்றது. திருப்புன்கூர், சோழநாட்டுத் தலம். சண்ணித்தல் - பூசுதல். 4. பொ-ரை: சடையில் கங்கை வெள்ளத்தைச் சூடிய திறலுடைய வரும், தக்கனுடைய பெரிய வேள்வி நிறைவேறாமல் தடுத்தவரும், உடையாக அணிந்த புலித்தோல் மீது பாம்பினை இறுக்கிக் கட்டிப் பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும், நீர்மடையில் ஏறிக் கயல்பாயு மாறு நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட மயிலாடுதுறையின் தலைவரும், காளை எழுதிய கொடியை உயர்த்திய எம் புனிதரும், வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே. கு-ரை: ஏறு புனல் - பெருகும் நீர். சதுரனார் - திறலுடையவர். உடை ஏறு - உடையாகப் பொருந்திய. உழிதரல் - திரிதல். மயிலாடுதுறை - மாயூரம். மணாளனார் - தலைவர். 5. பொ-ரை: ஐம்பூதங்களும், அவற்றின் பண்புகளுமாய் நிலைபெற்றவரும், பண்ணோடு கூடிய பாடலும் கூத்தும் நிகழும் சீசைலம்,
|