பக்கம் எண் :

939
 
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்

கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்

விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

5

2681.வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்

வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாரும்

கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும்

குரைகழ லாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்

ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்

ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்

வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

6


பாசூர் இவற்றில் உறைபவரும், நெற்றிக்கண்ணினரும், மண்டையோட்டினை ஏந்தி வீட்டு வாயில்தோறும் பிச்சை ஏற்கும் செயலை உடையவரும், பிறையை முடிமாலையாக உடையவரும், வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

கு-ரை: "இலங்கு" என்பதனை எல்லாவற்றிற்கும் இயைய, "மண்" என்றதற்கு முன்னே கூட்டுக; மற்று, சடை. குணம், 'சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம்' என்பன. பருப்பதம் - சீ பருப்பதம் (சீசைலம்); இது வடநாட்டுத்தலம். பாசூர், தொண்டை நாட்டுத்தலம். கடை - வாயில்.

6. பொ-ரை: அடியவருக்கு வீட்டுலகம் நல்குபவரும், விடமுண்ட நீலகண்டரும், பகைவருடைய மும்மதில்களையும் எரித்தவரும், திருவடியால் கூற்றுவனை உதைத்தவரும், படமெடுத்தாடும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவரும், கல்லால மர நிழலிலிருந்து அறத்தை உபதேசித்தவரும், வேடராய் முன்னொரு காலத்தில் அருச்சுனனுக்கு அருளியவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

கு-ரை: வீடு - முத்திப்பேறு. மெய்யடியார், பயன் கருதாது அன்பு காரணமாகவே வழிபடுவர். வேலை - கடல். கூடலர் - பகைவர். குமை - குமைத்தல்; அழித்தல்; முதனிலைத் தொழிற் பெயர். "அங்கு" என்பது அசைநிலை. மேல் - பின்; 'முன்பு போர்செய்து பின்பு அருள் செய்தார்' என்றதாம்.