பக்கம் எண் :

941
 
2684.வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்

வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்

களங்கொளவென் சிந்தை யுள்ளே மன்னினாருங்

கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்

உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும்

உத்தமரா யெத்திசையும் மன்னி னாரும்

விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.

9


நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுமாகி இருப்பவரும், மேகத்தை அளாவிய நீண்ட சோலைகளையும் மாட வீதிகளையும் மதிலையும் உடைய ஆரூரில் புகுந்து அங்கே நிலையாகத் தங்கிய வரும், மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

கு-ரை: "சடைக்கு", 'சடைக்கண்' என உருபு மயக்கம். திரு வாலவாய் - மதுரைத் திருக்கோயில். அஞ்சனம் - மை.

மஞ்சு - மேகம். 'சோலையையும் வீதியையும், மதிலையும் உடைய ஆரூர்' என்க.

9. பொ-ரை: வளமான பிறைசூடும் சடையினரும், தேவர்களுக்காக விடத்தை உண்ட வலியவரும், என் உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு தங்கியவரும் கச்சி ஏகம்பத்து உறைபவரும், என் உள்ளம் குளிருமாறு அமுதமாக ஊற்றெடுத்து இனிப்பவரும், மேம்பட்டவராய் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்றிருப்பவரும், ஒளிவீசும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

கு-ரை: களம் கொள - தாம் தமக்கென்று ஓர் இடம்பெற்று நிற்றற் பொருட்டு. "களங்கொளக் கருத அருளாய் போற்றி" (தி.8 திருவா. போற்றித் - 171.) என்பதும் இப்பொருள் படுதல் உணர்க.

அமுது ஊறி - அமுதம் சுரப்பது போன்று. அண்ணிப்பார் - இனிப்பார். உத்தமர் - மேலானவர். 'விளங்குகிளரும்' என்பது குறைந்து நின்றது; விளங்கு - விளங்குதல்; முதனிலைத் தொழிற் பெயர்.