| 2685. | பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் | | | புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங் | | | கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங் | | | குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந் | | | தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந் | | | திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும் | | | மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும் | | | வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே. | 10 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: பொன்போல் விளங்கும் கொன்றை மாலை சூடிப் புகலூரிலும் பூவணத்திலும் உறைபவரும், அச்சம் தரும் முத்தலைச் சூலம் ஏந்தியவரும், குளிர்ச்சி தரும் கங்கைபொருந்திய செஞ்சடையை உடைய இளையரும், இராவணனுடைய பத்துத்தலைகளையும் தம் காலின் அழகிய விரலால் வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவரும், மின்னல்போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே. கு-ரை: பொன் இலங்கு - பொன்போல விளங்குகின்ற. தார் இன்பநிலையிலும், மாலை வெற்றியிலும் அணியப்படுவன. புகலூர், சோழநாட்டுத் தலம்; இதுவே, சுவாமிள் இறைவன் திருவடி கூடிய இடம். பூவணம், பாண்டிநாட்டுத் தலம். கொன் - அச்சம். கங்கை வைக்கப்பட்டிருத்தலின், சடை குளிர்ச்சி பொருந்தியதாயிற்று. திருநாவுக்கரசர் புராணம் பெருவாச மலர்ச்சோலைப் பெருவேளூர் பணிந்தேத்தி | முருகாரும் மலர்க்கொன்றை முதல்வனார் பதிபிறவும் | திருவாரும் விளமருடன் சென்றிறைஞ்சி வாகீசர் | மருவாரூர் எரித்தவர்தந் திருவாரூர் வந்தடைந்தார். | -தி.12 சேக்கிழார். |
|