பக்கம் எண் :

944
 
2687.செய்யானை வெளியானைக் கரியான் தன்னைத்

திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் தன்னை

ஐயானை நொய்யானைச் சீரி யானை

அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்

மெய்யானைப் பொய்யாது மில்லான் தன்னை

விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்

கையானைக் கற்குடியில் விழுமி யானைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

2


கு-ரை: மூத்தவன் - முற்பட்டவன். 'வானவர்க்கும் மூத்தவனை' எனக் கூட்டுக. மூவா - மூப்படையாத. 'முதல்வன்' என்பது, அகரம் பெற்று, "முதலவன்" என நின்றது. அக்கு - எலும்பு. அடைந்த அன்பு - அடைந்ததற்குக் காரணமாயிருந்த அன்பு. 'அடியார் அன்போடு பணிந்து ஏத்தவனை' எனக் கூட்டுக. ஏத்தவன் - ஏத்தப்படுதல் உடையவன்; இதன்கண், 'ஏத்து' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் செயப்பாட்டு வினையாய் நின்றது.

இறு வரை - பெரிய மலை. "ஏனோர்க்கு" என்றது, 'தனக்கின்றிப் பிறர்க்கு' என்றவாறு; பிறர், தேவர். காத்தவன் - வராமல் தடுத்தவன். விழுமியான் - மேலானவன்.

2. பொ-ரை: செம்மை, வெண்மை, கருமை என்ற நிறங்களை உடையவனாய், பிரமனாய், பெருந்திசையும் பரவியவனாய், அழகியவனாய், நன்மையனாய், புகழுடையவனாய், அண்மையில் உள்ளவனாய்த் தீயவர்களுக்குத் தொலைவில் இருப்பவனாய், பஞ்ச கவ்வியத்தில் நீராடும் திருமேனியனாய், பொய்யேதும் இல்லாதவனாய், காளை வாகனனாய், சடைமுடியுடையவனாய், மருண்ட மானைக் கையில் ஏந்தியவனாய், கற்பகமாய்க் கற்குடியில் உறையும் சிறப்புடையவனை நான் கண்ணாரக் கண்டேன்.

கு-ரை: "செய்யானை" முதலிய மூன்றனையும் மேலே (ப.57 பா.3 குறிப்புரை.) காண்க. திசைமுகன் - பிரமனாய் இருப்பவன். ஐயான் - அழகியவன்; ஐயன் என்றலுமாம்.

நொய்யான் - நுணுகியவன். சீரியான் - புகழுடையவன். மெய்யான் - திருமேனியை உடையவன். வெறித்த - மருண்ட