பக்கம் எண் :

945
 
2688.மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை

வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை

விண்ணதனி லொன்றை விரிக திரைத்

தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க

எண்ணதனில் எழுத்தைஏ ழிசையைக் காமன்

எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்

கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

3

2689.நற்றவனைப் புற்றரவ நாணி னானை

நாணாது நகுதலையூண் நயந்தான் தன்னை

முற்றவனை மூவாத மேனி யானை

முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் தன்னைப்

பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற

படையானை அடைவார்தம் பாவம் போக்கக்

கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

4


3. பொ-ரை: மண்ணில் ஐந்து, நீரில் நான்கு, தீயில் மூன்று, காற்றில் இரண்டு, விண்ணில் ஒன்று என்ற பண்புகளுக்குக் காரணனாய், சூரியனாய், சந்திரனாய், விண்மீன்களாய், அவைகளிலும் எண்ணிறந்தனவாய் உள்ள பொருள்கள் மேல் நிகழும் சொற்களாய், ஏழிசையாய், மன்மதனுடைய அழகிய உடல் அழியுமாறு தீயை வெளிப்படுத்திய அதற்குமுன், திறக்கப்படாத நெற்றிக்கண்ணனாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

கு-ரை: "மண்ணதனில் ஐந்து" முதலியவற்றை மேலே (ப.54 பா.5. குறிப்புரை) காண்க. தாரகைகள் - விண்மீன்கள். 'தாரகைகளை' என்பதும், 'எண்ணதனை' என்பதும் உடம்பொடு புணர்த்தலாற் கொள்ளப்படும். 'தாரகைகளினும் மிக்க எண்' என்க. எண்ணதனில் எழுத்தாவது, எண்ணப்படும் பொருள்மேல் நிகழும் சொல்.

4. பொ-ரை: மேம்பட்ட தவத்தினனாய்ப் பாம்பை வில் நாணாகக் கொண்டவனாய் வெட்கப்படாமல் மண்டையோட்டில் இடப்படும் பிச்சையை