| 2690. | சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் தன்னைச் | | | சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும் | | | அங்கையனை அங்கமணி ஆகத் தானை | | | ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த | | | மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் | | | மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க் | | | கங்கையனைக் கற்குடியில் விழுமியானைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 5 |
விரும்பியவனாய், நிறைவுடையவனாய், மூப்படையாத உடம்பினனாய், கடல் நஞ்சை விரும்பி உண்டவனாய், எப்பொருட்கும் பற்றுக்கோடாய் உள்ளவனாய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த படையை உடையவனாய், தன்னை அடைந்த அடியவருடைய பாவத்தைப் போக்கக் கற்றவனாய், கற்பகமாய் கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே. கு-ரை: நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன். நகுதலை ஊண் - வெற்றெலும்பாய்ச் சிரிப்பதுபோலக் காணப்படும் தலையோட்டில் உண்ணுதல். நயந்தான் - விரும்பினான். முற்றவன் - நிறைவுடையவன்; முந்நீர் - கடல். பற்றவன் - எப்பொருட்கும் பற்றாய் (பற்றுக்கோடாய்) உள்ளவன். பற்றார் - பகைவர். பதிகள், திரிபுரங்கள். செற்ற - அழித்த. படை - படைக்கலம்; அம்பு. இயல்பாகச் செய்பவனை, கற்றுச் செய்பவனாக அருளியது, புகழ்தல் கருதி; இஃது இலக்கணை. 5. பொ-ரை: ஐயத்தைப் போக்கி அடிமை கொண்ட தலைவனாய், நன்மை செய்பவனாய், கைப்பிடியை உடைய நெருப்பைப் போன்ற கொடிய மழுப்படையைத் தாங்கும் கையனாய், எலும்பை அணிந்த மார்பினனாய், பார்வதி பாகனாய், பிறையும் பாம்பும் நட்புடன் பழகும் தன் சடைமுடிமேல் ஆகாய கங்கையை வைத்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே. கு-ரை: சங்கை - ஐயம்; அது, 'முதற்பொருள் ஒன்று உண்டோ இல்லையோ' என்பது; இவ்வையத்தினை உண்டாக்கியவர், சமணர்கள். அதனைத் தவிர்த்தமையாவது, 'முதற்பொருள் உண்டே' என்பதனை,
|