| 2692. | பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப் | | | பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம் | | | உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை | | | யொருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா | | | விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் | | | வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக் | | | கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 7 |
| 2693. | வானவனை வானவர்க்கு மேலா னானை | | | வணங்குமடி யார்மனத்துள்மருவிப் புக்க | | | தேனவனைத் தேவர்தொழு கழலான் தன்னைச் | | | செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக் | |
7. பொ-ரை: பண்டையனாய், உலகத்தோற்றத்தில் பரந்து நிற்பவனாய், உலக ஒழுக்கத்தில் குவிந்து இருப்பவனாய், இவ்வுலகாய், தேவருலகாய், இவ்வுலகமெல்லாம் உண்டவனாய்ப் பின் வெளிப்படுத்தியவனாய், அவற்றிற்கு உரிமையாளனாய், ஒருவரும் தன் பெருமையை அறிய முடியாதபடி சேயனாய், பகைவர் முப்புரமும் தீயில் வெந்து பொடியாகி விழச் செய்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே. கு-ரை: 'பண்டையான்' என்பதில் சாரியை ஐகாரம் தொகுத்தலாயிற்று. பரந்து நிற்றல் உலகத்தின் தோற்ற நிலைகளிலும், குவிந்து நிற்றல் அதன் ஒடுக்கத்திலும் என்க. இதனை, "விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை" (தி.2 ப.30 பா.3) என்னும் திருஞானசம்பந்தர் திருமொழியோடு நோக்குக. உண்டான் - ஒடுக்கினான். உமிழ்ந்தான் - படைத்தான். 'ஒண்ணாது' என்பதன் ஈறுகெட்டது விண்டான் - நீங்கினான்; சேயனாயினான். கண்டான் - செய்தான். 8. பொ-ரை: வானவனாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய், தன்னை வணங்கும் அடியவர் மனத்துள் விரும்பிப்புகுந்த தேன் போன்றவனாய், தேவர்கள் தொழும் திருவடிகளை உடையவனாய், பலவாகி நின்ற தன் செயல்கள் யாவினும் வெற்றி காணும் தலைவனாய், முல்லை நிலத்தெய்வமாம் திருமாலாகிய காளையை உடையவனாய், குழலும் முழவும் ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடவல்ல, கற்பகம் போன்ற கற்குடியில் விழுமி யானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
|