பக்கம் எண் :

949
 
கோனவனைக் கொல்லை விடை யேற்றி னானைக்

குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல

கானவனைக் கற்குடியில் விழுமியானைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

8

2694.கொலையானையுரிபோர்த்த கொள்கை யானைக்

கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த

சிலையானைச் செம்மைதரு பொருளான் தன்னைத்

திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த

தலையானைத் தத்துவங்க ளானான் தன்னைத்

தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து

கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்

கற்பகத்தைக்கண்ணாரக் கண்டேன் நானே.

9


கு-ரை: தேவ வடிவில் தோன்றுதலின், "வானவனை" என்றருளினார். "குணங்கள்" என்றது செயலை; அச்செயல்கள் அனைத்தும் தான் நினைத்தவாறே முடித்தலின், "நின்ற வென்றிக் கோன்" என்றருளிச்செய்தார். "அவன்", பகுதிப்பொருள் விகுதி. "கொல்லை" என்னும் ஐகாரம் சாரியை. "விடை ஏறு" என்பது, இரு பெயரொட்டு. "கானவன்" என்றது, காட்டில் ஆடுதல்பற்றி; இதனால், குழலும் முழவமும் இயம்புவன பூதகணங்கள் என்பது பெற்றாம்.

9. பொ-ரை:தன்னால் கொல்லப்பட்ட யானையின் தோலைப் போர்த்த செயலினனாய், மலையாகிய வில்லில் திருமாலைக் கூரிய அம்பாகக் கோத்தவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், திரிபுர அசுரருள் சுதர்மன், சுசீலன், சுமாலி என்ற மூவருக்கு நலன் செய்த மேம்பட்டவனாய், மெய்ப்பொருள்கள் ஆகியவனாய், பார்வதி பாகனாய், கையில் மானை ஏந்தியவனாய், கற்பகமாய், கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

கு-ரை: கோள் அரி - எல்லாரையும் வெற்றி கொள்ளும் திருமால்; இனி, நரசிங்கமாய்த் தோன்றினமைபற்றி, "கோளரி" என்றார் எனினுமாம். அரி, 'நெருப்பு (தீக்கடவுள்)' என்றலும் பொருந்தும். 'அரியைக்கோத்த' என இயையும். வரை, மேரு மலை. செம்மை - நன்மை. அதனைத் தருபவன்