| 2695. | பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப் | | | புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை | | | எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை | | | ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் தன்னை | |
அதனைத் தனக்கு இயல்பாக உடைய சிவபிரானேயாதல் அறிக. திரிபுரத்து ஓர் மூவர், 'சுதன்மன், சுசீலன், சுமாலி' என்பவர். திரிபுரத்து அசுரர்கள், புத்தனும் நாரதனும் மயக்கிச் சொல்லிய உரைகளால் மயங்கிச் சிவபத்தியைக் கைவிட்ட பொழுதும், அதிற் பிறழாது நின்றவர் இம்மூவரும். அதனால், திரிபுரம் முழுதும் வெந்து நீறாகச் செய்தபொழுது, சிவபிரான், இம்மூவரையும் உய்யக்கொண்டான். இப்பேரருட்டிறத்தினை, "உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே யுந்தீபற" என ஆளுடைய அடிகளும், (தி.8 திருவா. திருவுந்தி. 4) 'மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள் செய்தார்' (தி.1.ப.69. பா.1.) என ஆளுடைய பிள்ளையாரும், | "மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்தமூவரில் | இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல் | | காவலாளரென் றேவிய பின்னை | ஒருவன் நீகரி காடரங் காக | | மானை நோக்கியோர் மாநடம் மகிழ | மணிமு ழாமுழக் கவ்வருள் செய்த | | தேவ தேவநின் திருவடி யடைந்தேன் | செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே" |
என ஆளுடைய நம்பிகளும் (தி.7. ப.55. பா.8.) சிறந்தெடுத்தருளிச்செய்தமை காண்க. இம்மூவர்க்குச் செம்மை செய்தமைதானே,தன்னையடைந்தார்க்கு எஞ்ஞான்றும் இடையூறுவாராதுகாத்துச் செம்மை தருவன் என்பதற்கு அமையும் சான்றுஎன்பது குறித்தருளியவாறு. தலையான் - முதல்வன். தத்துவங்கள்- காரணப்பொருள்கள். கலை - மான். 10. பொ-ரை: உலகமாக உள்ளவனாய், சோலைகள் நிறைந்த புன்கூர், புறம்பயம், அறத்தை விரும்பிச் செய்கின்ற புகலூர், இடைமருது, ஈங்கோய்
|