| அழலாடு மேனியனை அன்று சென்றக் | | | குன்றெடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றுங் | | | கழலானைக் கற்குடியில் விழுமி யானைக் | | | கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. | 10 |
திருச்சிற்றம்பலம்
இவற்றில் அழகாக இடங்கொண்டு நீங்காது தங்கும் தலைவனாய், தீயில் கூத்தாடும் திருமேனியை உடையவனாய், ஒரு காலத்தில் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு ஊன்றிய திருவடியை உடையவனாய்க் கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே. கு-ரை: பொழிலான் - உலகமாய் உள்ளவன். புறம்பயம், புகலூர், இடைமருது, ஈங்கோய் இவை சோழநாட்டுத் தலங்கள். அறம்புரிந்த - அறத்தை எப்பொழுதும் விரும்பிச் செய்கின்ற. "புறம்பய மதனில் அறம்பல அருளியும்" (தி.8 திருவா. கீர்த்தி. 90) என்றருளினமையால், 'அறம் புரிந்த புறம் பயனை' எனக்கூட்டி யுரைத்தலுமாம். அழல் ஆடு மேனி. நெருப்பு எரிவது போலும் திருமேனி. "அக் குன்று" என்றது, பலரறி சுட்டாய்க் கயிலைமலையைக் குறித்தது. திருநாவுக்கரசர் புராணம் | சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச் | செஞ்சொன் மாலை பலபாடி | | இலங்கு சடையார் எறும்பியூர் | மலையும் இறைஞ்சிப் பாடியபின் | | மலர்ந்த சோதித் திருச்சிராப் | பள்ளி மலையுங் கற்குடியும் | | நலங்கொள் செல்வத் திருப்பராய்த் | துறையுந் தொழுவான் நண்ணினார். | -தி.12 சேக்கிழார். |
|