61. திருக்கன்றாப்பூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருவாரூரில் தங்கியிருந்தபொழுது வலி வலம், கீழ்வேளூர் பணிந்து கன்றாப்பூர் வணங்கிப் பாடி யருளியது இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 228) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவன், அன்போடு வழிபடும் அடியவர் உள்ளத்தையே இடமாகக் கொண்டு இனிது விளங்குதலை அருளிச் செய்தது. அதனால், அவ்வன்பின் செயல்களும், வழிபாட்டு ஒழுக்க நெறிகளும் இதன்கண் இனிதெடுத்து விளக்கியருளப்பட்டன. எனவே, சிவநெறி ஒழுகுவார்க்கு இத்திருப்பதிகம் சிறந்ததொரு செந்நெறியை அருள்வதாய் உளது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 274 | பதிக எண்: 61 |
திருச்சிற்றம்பலம் | 2696. | மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா | | | மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம் | | | நாதனே யென்றென்று பரவி நாளும் | | | நைஞ்சுருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்து | | | வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு | | | வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக் | | | காதன்மையால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே | | | கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 1 |
1. பொ-ரை: பார்வதி பாகனே! வேதம் ஓதும் நாவனே! பிறை சூடியவனே! தேவர்கள் தலைவனே! என்று புகழ்ந்து நாடோறும் மனம் இளகி உருகி, வஞ்சகமில்லாத அன்பு மிகுந்து, முப்பொழுதும் வாசனை மிக்க நீரும் பூவும் கொண்டு மறவாது வாழ்த்திப்புகழ்ந்து அன்போடு தொழும் அன்பருடைய மனத்தினுள்ளே கன்றாப்பூரில் நடப்பட்டமுளை வடிவினனாய் உள்ள பெருமானைக் காணலாம். கு-ரை: பரவி - துதித்து. 'வாசனை' என்னும் வடமொழிப்பதம் 'வாதனை' எனவும் திரிந்து வருவதாம். வாதனையால் - வாசனையோடு;
|