| 2698. | எவரேனுந் தாமாக விலாடத் திட்ட | | | திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி | | | உவராதே யவரவரைக் கண்ட போதே | | | உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி | | | இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி | | | இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் | | | கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே | | | கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 3 |
கு-ரை: விடிவது, 'விடிதல்' எனத் தொழிற் பெயர்; 'தொழிற் பெயர் உம்மை ஏற்று வினையெச்சமாம்' என்பது, 'வருதலும் போயினான்' என்றாற் போல்வனவற்றுட் காண்க. விடிதல் - பொழுது புலர்தல். "மெய்யில் (உடம்பில்)" என விதந்தோதினமையால், நீர்மூழ்கல் முதலியன முன்னரே அமைந்து கிடந்தனவாம். தற்று - இறுக உடுத்து. "தெய்வம் - மடிதற்றுத் தான்முந் துறும்" (குறள் - 1023) என்றது காண்க. கீளொடு கோவணம் தற்று' என்றார். துறந்தார்க்கு இவ்வொழுக்கம் சிறப்பாக உரியதாகலின். செடி - கீழ்மை. கடி - வாசனை. இதனுள், விடியலில் வழிபடுதல் சிறப்பாகப் பணித்தருளப்பட்டது. 3. பொ-ரை: யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். கு-ரை: "தாம்" என்பது அசைநிலையாதலின், 'எவரேனுமாக' என்க. "எவரேனும்" என்றது, 'எவ்வகைக் குற்றமுடையராயினும்' என்றபடி. இலாடம் - நெற்றி. சாதனம் - துணைப்பொருள்; என்றது, உருத்திராக்கம் முதலிய பிற வேடங்களை. திருநீறு' ஒன்றேயும், திருவேடமாதற்கு அமையும் என்றற்கு அதனைப்பிரித்தோதி யருளினார். இனி, உருத்திராக்கத்தையே சாதனம் என்றல் மரபு' என்பாரும் உளர். உள்கி - (திருவேடத்தின் பெருமையை)
|