பக்கம் எண் :

955
 
2699.இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்

திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு

விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு

மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்


நினைந்து. உவராதே - வெறுத்தல் இல்லாமலே; அஃதாவது, 'எவரேனும் என்பதனாற் குறிக்கப்பட்ட குற்றங்களை நினைந்து வெறுத்தல் சிறிதும் இன்றி' என்றபடி. திருவேடங்கள் பலவகையினவாதல் தோன்ற அவற்றை உடையவரை, 'அவரவர்' என்றருளினார். "கண்ட போதே என்னும் பிரிநிலை ஏகாரம் விரைவு குறித்தது. குற்றியலுகரங் கெடாது நிற்றல் சிறப்பின்மையின், 'கண்டபோது' என்னும் பாடம் சிறவாமை யறிக. உகந்து - திருவேடத்தில் உள்ள விருப்பம் எழப்பெற்று. அடிமைத் திறம் நினைந்து - அடியராவார், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. உவந்து நோக்கி - திருவேடம் கிடைக்கப் பெற்றமைக்கு மகிழ்ச்சி மிக உடையராய் முகமலர்ந்து நோக்கி. "இவர்" என்றது திருவேடம் உடையாரையும், "அவர்" என்றது இறைவரையும். "தேவர்" என வந்த இரண்டிடத்தும் தெரிநிலை ஓகாரங்கள் தொகுத்த லாயின. இரண்டு ஆட்டாது - உள்ளத்தை இருதலையாகச் செலுத்தாது; என்றது, ஆராயாது என்றபடி 'இரண்டாக ஆட்டாது' என ஆக்கம் வருவித்துரைக்க. "ஒழிந்து" என்றது, துணிவுப் பொருட்டு. ஈசன் திறமே பேணி - இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே பேணிச் செய்து. கவராதே - அங்ஙனம் செய்யுமிடத்து ஒருஞான்றும் மனம் இரண்டுபடாமலே; கண்டதுமுதல், எதிர்கொண்டு வழிபாடுகள் பலவும் செய்து விடுக்குங்காறும், விடுத்த பின்பும் எப்பொழுதும், திருவேடமுடையாரைச் சிவனெனவே கோடலிற் பிறழாமை வேண்டும் என்பார், 'உவராதே' என்பது முதலாக, "கவராது" என்பது காறும் அவ்வவ்விடத்தும் அதனை எடுத்தோதி வலியுறுத்தருளினார். இதனால், திருவேடந் தொழுதல் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது, 'திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்' என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும்.

4. பொ-ரை: 'யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்' என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல்