| 2701. | பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் | | | பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று | | | பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப் | | | பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் | | | வசியினா லகப்பட்டு வீழா முன்னம் | | | வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் | | | கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே | | | கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. | 6 |
பின்னது, 'பிறிது பற்றின்றி' என்னும் பொருளது. 'கருத்து' என்றது விருப்பத்தினை. இதனால், முறையீடும் பற்று நீங்குதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன. 6. பொ-ரை: செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். கு-ரை: பொசி - கசிவு; என்றது, செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றை. பொதிந்த - மூடிய. பொல்லாத - இழிந்த. நிலாசும் - நிலைபெற்றிருக்கும்; 'நிலாவும்' என்பதே பாடம் போலும்! "ஈட்டி" என்பதற்குப் பொருளை என்பது வருவிக்க. வசி - வசப்படுத்தல். வீழ்தல் - மெலிதல். அஞ்சு - அஞ்செழுத்து. கசிவு - நெகிழ்ச்சி: அன்பு. வானவர்கோன் - சிவபிரான். இதனால். இளமை நிலையாமை கருதி விரைந்து இறைவனை வழிபடுதலும். திருவைந்தெழுத்தை ஓதுதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன. 7. பொ-ரை: கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச்
|