பக்கம் எண் :

959
 
2702.ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு

ஆவியார் போவதுமே அகத்தார் கூடி

மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி

மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்

ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு

அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்

கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

7

2703.திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்

திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்

சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்

கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்

பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா

பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்

கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

8


சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

கு-ரை: ஐ - கோழை. மிடறு - குரல். "ஆவியார்" என்றது. நிலையாமை பற்றிய இழித்தற் குறிப்பு. கண்ணை மையினால் எழுதி என்க. இதனால், யாக்கை நிலையாமையை அறிந்து, சிவபிரானை விரைந்து தொழுதல் பணித்தருளப்பட்டது.

8. பொ-ரை: மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, 'சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.