பக்கம் எண் :

960
 
* * * * * * * * *

9

2704.குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்

கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்

தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்

தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி

முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்

முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்

கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.

10

திருச்சிற்றம்பலம்


கு-ரை: திருதி - மன உறுதி; 'மன உறுதியாகிய பண்பினால் என்றபடி. ஐவர் - ஐம்பொறிகள். காவல் ஏவி - காவலில் வைத்து. திகையாதே - மனங் கலங்காமலே, சுருதி - மறை; மந்திரம். 'மானதமாகக் கணிக்கப்படுவது' என்பார், "சிந்தைச் சுருதி" என்றருளினார்; "சுருதிதனை" என்பதைச் சுருதிதன்னால்' எனத் திரிக்க. துயக்கு - மயக்கம். 'சுருதி தன்னால் துயக்கறுத்து' என்க. 'மிகத் கருதி' என மாறிக் கூட்டுக. கருதி - தியானித்து. இதனால், திருவைந்தெழுத்தை ஓதுமுறைமை அருளப்பட்டது. இத்திருப்பதிகத்தின் ஒன்பதாம் திருத் தாண்டகம் கிடைத்திலது.

9. * * * * * * * * *

10. பொ-ரை: வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

கு-ரை: தனஞ்சயன் - அருச்சுனன். தசக்கிரிவன் - இராவணன். முரண் - வலிமை. 'தாளையும் தோளையும் முரண் அழித்து' என்றதனை, 'பசுவைப் பால் கறந்தான்' என்பது போலக்கொள்க. கனிந்து - அன்பு கொண்டு. இதனால், இறைவன் புகழைப் பேசுதல், சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது.