பக்கம் எண் :

961
 

62. திருவானைக்கா

பதிக வரலாறு:

சுவாமிகள், திருப்பழையாறை வடதளியில் சமணர் மறைத்த சிவலிங்கத்தை, அமுது செய்யாதிருந்து வெளிப்படுத்தி அமணர் தூரறுத்து வழிபட்டுப் பொன்னியின் இரு கரையிலுமுள்ள தலங்களை வணங்கித் திருவானைக்காவில் சிலந்திக்கு அருளிய பெருமான் கழல் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (திருநாவு. புரா. 301, 302)

குறிப்பு: இத் திருப்பதிகம், திருவானைக்காப் பெருமானது திருவடியை அடையப் பெற்ற மகிழ்ச்சியால், 'இனி, வேறோர் உறவும் வேண்டுவது இல்லை: துன்பத்திற்கும் அஞ்சேன்' என்று அருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 275

பதிக எண்: 62

திருச்சிற்றம்பலம்

2705.எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்

எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்

திருவானைக் காவுடைய செல்வா என்றன்

அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

1


1. பொ-ரை: எத்தனை மேம்பட்ட நற்றாய் செவிலித்தாயர், தந்தை, சுற்றத்தார் என்று நம்மால் போற்றப்படுபவருள் எவர் நமக்கு நல்லவர்கள்! எந்தச் செல்வம் நம்மைத்தாங்கக்கூடியதாகும்? நாம் இறந்தால் நம் தேகபந்துக்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் ஏனைய தேகபந்துக்களை விடுத்து, 'என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில்