| 2706. | ஊனாகி உயிராகி யதனுள் நின்ற | | | உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய் | | | நானேதும் அறியாமே யென்னுள் வந்து | | | நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய் | | | தேனாருங் கொன்றையனே நின்றி யூராய் | | | திருவானைக் காவிலுறை சிவனே ஞானம் | | | ஆனாய்உன் பொற்பாதம் அடையப் பெற்றால் | | | அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 2 |
எதிர்காலத்தாற் கூறியது, பெற்றதன் அருமை நோக்கி யென்க. அல்லகண்டம் - துன்பம். "கொண்டு" என்பது, மூன்றாம் வேற்றுமை ஆன் உருபின் பொருள்படுவதோர் இடைச்சொல். என் செய்கேன் - வருந்துதல் என் செய்யக் கடவேன்; யாது மில்லை என்றவாறு; 'அவை என்னை ஒன்றும் செய்யா' என்பது கருத்து; ஆகவே, 'தாயர் முதலியவரை நல்லாராகவும், மாட்டினைச் சும்மாடாகவும் கருதிக் கிடப்பின், யான் துன்பக்கடலுள் அழுந்தி யொழிவேன்' என்றபடி. 'துன்பம்' என்றது, பிறப்பினையும், அதன் கண் வரும் 'ஆதியான்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தெய்வீகம்' என்னும் மூன்றனையுமாம். ஆதியான்மிகம் முதலிய மூன்றும் மேலே (ப.23. பா.1. குறிப்புரை.) குறிக்கப்பட்டன. 2. பொ-ரை: திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீ உள்ளாய். யான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய், தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது. கு-ரை: "ஊண்" என்றது, உடம்பை. ஏதும் - சிறிதும். 'நானே சிறிதும் அறியாதபடி என்னுள்ளே வந்து' என்றது, 'என்றுமே என்னுள் இருந்து' என்றவாறு. நின்றியூர், சோழ நாட்டுத் தலம். 'அனைத்தும் நீயே ஆயினமை உணரப்படுதலின் சிலர் உறவும் சிலர் பகையுமாதல் நீங்குதலும், நீயே என் உணர்விற்கு முதலாதல் உணரப்படுதலின், 'யான்' என்பது நீங்குதலும், ஞானமே (அறிவே) வடிவாய் நிற்றலின் இன்பம் இடையறாது ஈண்டுதலும்
|