| 2707. | ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான் | | | ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று | | | துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் | | | திறம்மறந்து திரிவேனைக் காத்து நீவந் | | | தெப்பாலும் நுன்னுணர்வே யாக்கி யென்னை | | | ஆண்டவனே யெழிலானைக் காவா வானோர் | | | அப்பாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் | | | அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 3 |
உளவாமாகலின், உன் பொற்பாதம் அடையப்பெற்றால் எனக்கு வரும் துன்பம் யாதுளது' என்றருளிச் செய்தவாறு. 3. பொ-ரை: அழகான ஆனைக்காவில் உள்ளவனே! தேவர்கள் தலைவனே! எல்லோருடனும் சமமாய் இவ்வுலக நடையோடு பொருந்தி வாழ்வதனை மேற்கொள்ளாத சமணத்துறவியரோடு பொருந்தி வாழ்ந்து, உண்ணுதற்கேற்ற கஞ்சியுணவை நிரம்ப உண்டு, நன்மை தரும் உன் பண்பு செயல்களை மறந்து திரிந்த அடியேனைப் பாதுகாத்து, அடியேன் உள்ளத்து வந்து, எப்பொருட்கண்ணும் உன்னை உணரும் உணர்வைத் தந்து, என்னை அடிமை கொண்டவனே! உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே. கு-ரை: "ஒப்பாய் இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வான்" என்றதனை, "திரிவேனை" என்றதன்பின் கூட்டி உரைக்க. "வாழ்வான்" என்னும் எச்சம், "காத்து" என்பதனோடு முடியும். இவ்வுலகத்தோடு ஒப்பாய் ஒட்டி வாழ்தல் - கண்டார் அருவருக்குமாறு நக்கரை யாகாது உடையுடுத்தும், தலைமயிரைப் பறித்தல், நின்றுண்ணல், வெயில் நின்றுழலல் முதலியன இன்றியும் பிறர்போல நின்று ஒத்து வாழ்தல். சுவாமிகள் சமணரோடு இருந்தபொழுது இவ்வாறின்றி உலகத்தோடு ஒட்ட ஒழுகாதொழிந்தமையை நினைந்து, 'உலகத்தோடு ஒட்ட ஒழுகுவிக்கவும் திருவுளங்கொண்டருளினாய்' என்றருளினார். ஒன்றலா - ஒன்றாத; பொருந்தாத. தவத்தார், சமணர். துப்பு ஆரும் - உண்ணல் பொருந்திய. "குறையடிசில்" என்றது. 'கஞ்சி' என்றவாறு. துற்றி - நிறைத்து. 'துறு' என்பதேயன்றி, 'துற்று' என்பதும் முதனிலையாமாதலின், "துற்றி" என வந்தது. 'நன்று' என்பத 'நற்று' என வலித்தலாயிற்று. 'நீ வந்து காத்து' என
|