| 2708. | நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா | | | நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையாதுன்பால் | | | முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய் | | | முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங் | | | கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா | | | கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன் | | | அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா | | | அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 4 |
| "பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே | | | பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்; பார்க்க | | | வருஞானம் பலஞானம்; அஞ்ஞான விகற்பம்; | | | வாச்சியவா சகஞானம் வயிந்தவத்தின் கலக்கம் | | | தருஞானம்; போகஞா திருஞான ஞேயந் | | | தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும்; | | | திருஞானம் இவையெல்லாம் கடந்தசிவ ஞானம்; | | | ஆதலால் சீவன் முத்தர் சிவமேகண் டிருப்பர்" | | | (சிவஞானசித்தி. சூ. 11. பா. 2) | |
4. பொ-ரை: எல்லா உலகங்களையும் ஆள்கின்ற ஆனைக்காப் பெருமானே! உன்னை அன்போடு நினைப்பவர்களுடைய நெஞ்சிலே மறைந்து உறையும் வஞ்சனையை உடைய கள்வனே! ஒளி நிறைந்த பிறையைச் சடையில் சூடியவனே! உன்னைச் சரணடையாது, உன்னோடு பகைத்தவர்களின் மதில்கள் மூன்றும் தீயில் எரியுமாறு அழித்தவனே! முன் ஒரு காலத்தில் யானை ஒன்றனைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய உலக காரணனே! செருக்கி ஒலித்துக்கொண்டு வரும் காளையை இவர்ந்த நீல கண்டனே! கயிலாய மலையில் உறைபவனே! உன் திருவடிகளை அடைந்த அடியேன் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே! கு-ரை: நினையாதவர் நெஞ்சில் ஒளிந்திருத்தல் நோக்கி, வஞ்சக் கள்வா" என் றருளிச்செய்தார். 'உன்பால் அடையாது' என மாற்றுக. 'முனைந்தவர்' என்பது வலிந்து நின்றது; 'போர்செய்ய முற்பட்டவர்' என்பது பொருள். 'முனித்தவர்' என்னும் பாடத்திற்கும் வலித்தல் கொள்க. கனைத்தல் - ஒலித்தல். காளகண்டன் - நஞ்சு பொருந்திய கழுத்தினை உடையவன். "உன் கழலே சேர்ந்தேன்" என்பதனை, "ஆனைக்காவா" என்பதன் பின் கூட்டி, 'ஆதலின்' என்னும் சொல்லெச்சம் வருவித்து உரைக்க.
|