| 2709. | இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத் | | | திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங் | | | கைம்மான மனத்துதவிக் கருணை செய்து | | | காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய் | | | வெம்மான மதகரியி னுரிவை போர்த்த | | | வேதியனே தென்னானைக் காவுள் மேய | | | அம்மான்நின் பொற்பாதம் அடையப் பெற்றால் | | | அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 5 |
5. பொ-ரை: கொடிய மதச் செருக்குடைய யானைத் தோலைப் போர்த்த வேதியனே! அழகான ஆனைக்காவை உகந்தருளியிருக்கும் தலைவனே! இந்த நிலையின்மையை உடைய பிறவிக் கடலில் துன்பமாகிய சுழியில் அகப்பட்டு, வருந்தும் என்னைக் கைகொடுத்து நீர்ச் சுழியிலிருந்து காப்பவரைப்போல, மனத்திலிருந்து உதவி செய்து, கருணை காட்டி, என்னிடத்தில் அன்பையும், அருளையும் பொழிந்தும், யான் கண்ணால் காணுமாறு வெளியேநிற்கின்றாய் அல்லை. நின் பொற்பாதத்தை அடியேன் அடைப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே! கு-ரை: மாயம் - நிலையின்மை. கை மான மனத்து உதவி - கை (கொடுத்தல்) போல மனத்தின்கண் உதவிசெய்து; என்றது, 'குழியில் வீழ்ந்து கிடப்பாரைக் கையால் எடுத்து வழியிற் செலுத்துதல்போல, சமணசமயக் கொள்கையிலே அழுந்திக் கிடந்த மனத்தைத் திருப்பி உனது திருவருள் நெறியிற் செலுத்தி' என்றவாறு. இவ்வாறு உதவியதாகிய கருணையைச் செய்ததனோடு அமையாது, பின்னரும் நீற்றறை முதலிய பலவற்றால் துடிதுடித்து இறவாதவாறு காத்தருளினை என்பார், "உதவிக் கருணைசெய்து" எனவும், "காதலரு ளவை வைத்தாய்" எனவும் இருகாற் கூறியருளினார். 'இவ்வாறெல்லாம் உடன் நின்று தாயினும் சாலப் பரிந்தருளினாய் எனினும், ஊனக் கண்ணாற் காணுமாறு வெளிநின்றாயல்லை' என்றற்கு, "காண நில்லாய்" எனக் கூறியருளினார். 'இவ்வாறெல்லாம் செய்த உன் அருளாலே உன் பாதத்தை நான் அடையப் பெற்றேன்' என்பது திரு
|