பக்கம் எண் :

968
 
2710.உரையாரும் புகழானே யொற்றி யூராய்

கச்சியே கம்பனே காரோ ணத்தாய்

விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்

மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்

திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு

திருவானைக் காவிலுறை தேனே வானோர்

அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6

2711.மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்

மான்மறியும் மாமழுவும் அனலு மேந்துங்

கையானே காலனுடல் மாளச் செற்ற

கங்காளா முன்கோளும் விளைவு மானாய்


உள்ளம். வெம்மான மதகரி - வெவ்விய பெரிய மதமுடைய யானை. 'அம்மான்" என்றதும் விளிப்பெயர்.

6. பொ-ரை: புகழுவார் புகழும் சொற்களிலெல்லாம் நிறைந்த புகழுடையவனே! ஒற்றியூர், கச்சி ஏகம்பம், குடந்தை நாகைக் காரோணங்கள் இவற்றில் உறைபவனே! நறுமணமுடைய மலர்களைத் தூவி வணங்கும் அடியவர் மனத்தில் மிக்கு விளங்குபவனே! எலும்பையும் பாம்பையும் மாலையாகப் பூண்டவனே! அலைகள் நிறைந்த நீரை உடைய காவிரியாகிய புண்ணிய தீர்த்தம் நிறைந்த திருவானைக்காவில் உள்ள தேன் போன்ற இனியவனே! தேவர் தலைவனே! உன்பொற்பாதம் அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

கு-ரை: உரை ஆரும் - புகழுவார் புகழும் சொற்களில் எல்லாம் நிறைந்த. விரை ஆரும் - வாசனை நிறைந்த. மிக்கான் - மிகுந்து விளங்குபவன், 'அக்கினையும் அரவத்தையும் ஆரமாகப் பூண்டவனே' என்க. தீர்த்தம் - தெய்வயாறு; 'பொன்னியாகிய தீர்த்தம்' என்க. மல்கு - நீர்நிரம்பி ஓடும் இடமாகிய. சோலையில் உள்ள தேனே' என்பது நயம். அரையன் - அரசன்; தவைன்.

7. பொ-ரை: நீலகண்டனே! பார்வதிபாகனே! மான்கன்று, பெரிய மழுப்படை, நெருப்பு இவற்றைத் தாங்கும் திருக்கரங்களை உடையவனே!