பக்கம் எண் :

969
 
செய்யானே திருமேனி யரியாய் தேவர்

குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய

ஐயாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

7

2712.இலையாருஞ் சூலத்தாய் எண்டோ ளானே

எவ்விடத்தும் நீயல்லா தில்லை யென்று

தலையாரக் கும்பிடுவார் தன்மை யானை

தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த

சிலையானே திருவானைக் காவுள் மேய

தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்

அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்

அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

8


கூற்றுவனுடைய உயிர்போகுமாறு அவனை அழித்த, முழு எலும்புக்கூடு அணிந்தவனே! முற்பிறப்புக்களில் செய்து கொள்ளப்பட்ட வினைகளும் அவற்றின் பயன்களும் ஆனவனே! செம்மேனி அம்மானே! யாவர்க்கும் நேராகக் காண்பதற்கு அரியவனே! தேவர் குலத்துத் தளிர் போன்றவனே! அழகிய ஆனைக்காவுள் உறையும் தலைவனே! உன்பொற்பாதங்களை அடியேன் அடையப்பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.

கு-ரை: மை ஆரும் - கருமை பொருந்திய. மணி - அழகு; 'நீலமணி போலும்' என்றுமாம். "முன்கோள்" என்றது, முற்பிறப்புக்களில் செய்துகொள்ளப்பட்ட வினையை. விளைவு - அவ்வினையின் பயன். 'திருமேனி செய்யானே' என மாற்றுக. செய்யான் - செந்நிறம் உடையவன்; "திருமேனி செய்யான்" எனச் சினை முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டது. 'யாவர்க்கும் அரியாய்' என்க. குலம் - கூட்டம். "கொழுந்து" என்றது 'தலையாயவன்' என்றவாறு.

8. பொ-ரை: இலைவடிவாக அமைந்த சூலத்தை ஏந்தியவனே! பெருந் தோள்களை உடையவனே! எவ்விடத்தும் உன்னைத் தவிர வேறு பொருள் இல்லை என்று, தலைமேல் கைகுவித்துக் கும்பிடுபவர் செயல்களுக்கு உதவும் பண்பினனே! மேருவாகிய வில்லைக் கையில் கொண்டு, திரிபுரத்தைத் தீக்கு இரை ஆக்கியவனே! திருவானைக்காவுள் உறையும், தீயில் கூத்து