| 2713. | விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத | | | நெறியானே யெறிகடலின் நஞ்ச முண்டாய் | | | எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான் | | | என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னிக் | |
நிகழ்த்துபவனே! சிறிய நோய்களால் துன்புறுத்தப்பட்டு உள்ளம் வருந்தாது, நின் அடியே அடைதல் கூடுமாயின் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே. கு-ரை: இலை ஆரும் - தகட்டு வடிவம் பொருந்திய. இல்லை என்று - கடவுள் பிறர் இல்லை என்று உணர்ந்து; இவ்வாறுணர்தலே, 'சிவஞானம்' எனப்படுவது என்க. இச் சிவஞானத்தாற் சிவனை வணங்குவோர் மிகச் சிலரேயாதல் பற்றியே "ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்" (தி.5. ப.91. பா.3.) என அருளிச் செய்தார் சுவாமிகள். தன்மையான் - தன்மைக்கண் விளங்குபவன்; என்றது, 'அவர் தன்மை தன் தன்மையே யாம்படி ஆண்டு விளங்கி நிற்பவன்' என்றவாறு; எனவே, 'சிவனது தன்மை இத்தகையது' என்பதைச் சிவஞானிகள் பாலே நம்மனோர் காண்டல் கூடும் என்பது போந்தது. இதனையே, "ஒன்றுங் குறியே குறியாத லால்அதனுக் கொன்றுங் குறியொன் றிலாமையினால் - ஒன்றோ டுவமிக்க லாவதுவுந் தானில்லை ஒவ்வாத் தவமிக்கா ரேயிதற்குச் சான்று" என விளக்கிற்று, 'திருக்களிற்றுப்படியார்' என்னும் திருநூல் (10). தலையாரக் கும்பிடுதல், தலைமேற் கைவித்துக் கும்பிடுதல்; தலைக்கு மேல் உயரக் குவிப்பினும் அவ்வாறு உயர்வதற்கு எல்லையாய் நின்று தலை இன்புறும் என்க. தழல் மடுத்தது, திரிபுரங்களை. 'கையில் வைத்த மாமேருச் சிலையாய்' எனக் கூட்டி. 'மடுத்த சிலையாய், வைத்த சிலையாய், மேருச் சிலையாய்' எனத் தனித்தனி முடிக்க. "கையில் வைத்த" என்ற விதப்பு, 'மலை கையில் எடுக்க ஒண்ணாததாக, எல்லா மலைகளினும் மிகப்பெரிதாகிய மகாமேருமலையை எளிதிற் கையிலே வைத்தவன்' என்பது விளக்கிநின்றது. அலையாதே - வருந்தாத படியே; 'அலையாதே அடையப் பெற்றால்' என்க. 9. பொ-ரை: ஆகாய கங்கை தங்கிய செந்நிறச் சடையனே! வேத நெறியை உபதேசித்தவனே! கடலின் விடத்தை உண்டவனே! எண் நிறைந்த
|