| கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங் | | | கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய | | | அண்ணாநின் பொற்பாதம் அடையப் பெற்றால் | | | அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே. | 9 |
| 2714. | கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக் | | | குறட்பூதங் கூத்தாட நீயும் ஆடி | | | வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா | | | மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய் | |
புகழ்களுக்கு உரிய பண்புகளையும் செயல்களையும் உடையவனே! உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்துக் கண்கள் மகிழ்ச்சி நிறையுமாறு காணும்படி எப்பொழுதும் நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய ஆனைக்காவுள் உகந்தருளியிருக்கும் அண்ணால்! நின்பொற்பாதம் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே. கு-ரை: விண் ஆரும் புனல் - விண்ணுலகத்திற் பொருந்திய கங்கை. பொதி - கரந்த. சிவபிரானை இன்றிப் பிறரெல்லாத் தேவரும் கூடிச் செய்த தக்கன் வேள்வி முற்றாது கெட்டு, அவனும் தலை இழந்தமையின், 'வேதநெறியின் முதற்கடவுள் சிவபிரானே என்பதுதெற்றென விளங்கிக் கிடத்தலின், "வேதநெறியானே" என்றருளிச் செய்தார். எண் ஆரும் - எண் என்பன எல்லாம் நிரம்பிய: என்றது, 'எண்ணுட்படாத' என்றவாறு. 'உன்னை எப்பொழுதும் எம்தலைவன் என்று உரிமையோடு மனத்தினால் நினைந்தும் நாவினால் சொல்லியும், கண்ணாற்கண்டும் எப்போதும் களித்திருக்குமாறு உன் பொற்பாதம் அடையப்பெற்றால்' எனக்கொண்டு கூட்டிப் பொருள் உரைக்க. "நாவினால்" என்றதனால், 'சொல்லி' என்பதும், "உன்னி" என்றதனால் மனத்தினால் என்பதும் தாமேவந்து இயையும். அவை இரண்டிற்குமாகவே, "என்று என்று" என இருமுறை அருளிச் செய்தார். இவற்றால், நாயனாருக்கு ஆனைக்கா அண்ணலிடத்து உண்டாகிய அளவிலா ஆர்வம் புலனாவதாம். அண்ணா - அண்ணல்; தலைவனே. 10. பொ-ரை: கொடியில் எழுதப்பட்ட உருவாக அமைந்த காளையை உடையவனே! பேய்கள் பாடக் குட்டையான பூதங்கள் கூத்தாட, நீயும் கூத்து நிகழ்த்தி, அழகிய பார்வதி பாகனாய், மதில்களை உடைய ஆனைக்காவிலும்,
|