| 2716. | மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை | | | வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் உள்ளத் | | | திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை | | | இமையவர்தம் பெருமானை யுமையா ளஞ்சக் | | | கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக் | | | கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர் | | | திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச் | | | செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 2 |
திரள்" என அருளியது, இத்தலத்துள் இறைவன் நீர் ஊற்றாய் விளங்குதல் பற்றி; அதற்கேற்ப, "ஆடினேன்" என்றாராயினும், 'தலைப்பட்டேன்' என்பதே பொருளாகலின், அச்சொல் இரண்டனுருபுகட்கு முடிபாதலும், "மூர்த்தி" முதலியவற்றோடு இயைதலும் பொருந்திற்று. நீர்த் திரளைத் திருமேனியாகக் கொள்ளுதலின், "நீர்த்திரள்" என்றதனை அடையடுத்த இடவாகு பெயராகக் கொண்டு, மூர்த்தி முதலிய பெயர்களோடு இயைக்க. 2. பொ-ரை: அமுதமாக உள்ளவனாய், தியானிப்பவர் மனத்து இருப்பவனாய், பிறையை அணிந்த சடையனாய், மகிழ்ந்து என் உள்ளத்து இருப்பானாய், பிறப்பு இறப்பு இல்லாதவனாய், தேவர்கள் தலைவனாய், பார்வதி அஞ்சுமாறு கரிய மத நீரை உடைய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனாய், வலிய மழுப்படையை உடையவனாய், ஊர் ஊராய்ப் பிச்சை எடுத்துத் திரிவானாய்த் திருவானைக்காவில் உள்ள நீர்த்திரள்' வடிவாக அமைந்த பெருமானைத் தலைப்பட்டேன். கு-ரை: மருந்தான் - அமுதமாய் உள்ளவன்: 'பிறவிப் பிணிக்கு மருந்தாய் உள்ளவன்' எனலுமாம். "வளர்மதி" என்றது, 'இளம்பிறை' என்றவாறு. 'மதி' என்பது, அம்ஏற்று, மகர ஈறாய் நின்றது; அதன்கண் தொக்கு நின்ற இரண்டனுருபு, 'சடையான்' என்னும் வினைக்குறிப்புக் கொண்டது. "மகிழ்ந்து" என்றது. 'அருளி' என்னும் பொருளது கருந்தானம் - கரிய மதநீர்; இது கூறினமையால், "மதகளிறு" என்பதில் "மதம்" என்றதற்கு, 'களிப்பு' எனப் பொருள் உரைக்க. இவ்வாறன்றி, 'கருந்தாள மதகரி' எனப் பாடம் ஓதுவாரும் உளர். கனம் - பெருமை. 'கனல் மழுவாள்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
|