பக்கம் எண் :

976
 
2717.முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை

முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்

உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை

ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்

பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்

பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்

செற்றானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே.

3

2718.காராருங் கறைமிடற்றெம் பெருமான் தன்னைக்

காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்

தாரானைப் புலியதளி னாடை யானைத்

தானன்றி வேறொன்று மில்லா ஞானப்


3. பொ-ரை: பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்க்கு அமுதம் வழங்கும் உறவினனாய், பல உயிர்களுக்கும் துணையாவானாய், ஓங்காரத்தின் உட்பொருளாய், உலகங்களை எல்லாம் தோற்றுவித்துப்பின் ஒடுக்குபவனாய்த் தன்னைத் தலைவன் என்று போற்றாத அசுரர்களின் முப்புரங்களையும் அழித்தவனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே.

கு-ரை: முந்நீர் - கடல். உற்றான் - உறவினன்; களைகண் ஆனவன். ஓங்காரத்து உட்பொருளை மேலே (ப.39. பா.10) காண்க. "பெற்றான்" என்பது, 'தோற்றுவித்தான்' என்னும் பொருட்டாய் நின்றது. இறக்கம் செய்தல் - ஒடுக்குதலைச் செய்தல். "இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி - இறைவனே யீண்டிறக்கம் செய்வான்" (அற்புதத் திருவந்தாதி - 5.) என்னும் அம்மை திருமொழியைக் காண்க. 'இரக்கம் செய்வான்' என்னும் பாடம் சிறப்பின்று.

4. பொ-ரை: கருமை நிறைந்த நீலகண்டனாய்க் காதில் வெண்ணிறக்குழையை அணிந்தவனாய், நறுமணம் கமழும் கொன்றைப் பூ மாலையனாய், புலித்தோலை ஆடையாக அணிந்தவனாய், ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவனாய், படிகமணிமாலையை மார்பில் அணிபவனாய், உலகங்களை அழிப்பவனாய், தெய்வத் தன்மை பொருந்திய