பக்கம் எண் :

977
 
பேரானை மணியார மார்பி னானைப்

பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட

தேரானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

4

2719.பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்

புண்ணியனை நண்ணாதார் புரம்நீ றாக

எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை

ஏறமரும் பெருமானை யிடமான் ஏந்தும்

கையானைக் கங்காள வேடத் தானைக்

கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்

செய்யானைத் திருவானைக் காவு ளானைச்

செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

5


நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவனாய், திருவானைக்காவில் உறைபவனாய், உள்ள செழு நீர்த்திரளைச் சென்று ஆடினேனே.

கு-ரை: கார் ஆரும் கறை - கருமை பொருந்திய நஞ்சு; 'மணி மிடறு' என்பதும் பாடம். 'கொன்றைப் பூந்தாரானை' என மாற்றுக. தான் அன்றி - தான் இருப்பின் அல்லது. ஒன்றும் - ஒருபொருளும். இல்லா - இலையாகின்ற சிறப்பினை உடைய; என்றது, எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் உள்ள என்றபடி. 'பேர்' என மருவி நின்ற 'பெயர்' என்பது, ஈண்டு 'பொருள்' என்னும் பொருளதாய் நின்றது; 'ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவன்' என்க. காரியப் பொருட்டாகிய, "இல்லா" என்னும் எதிர்மறைப் பெயரெச்சக் குறிப்பு, காரணப் பெயர் கொண்டது. எலும்புமாலை தலைமாலைகளேயன்றி, ஏனையோரொடொப்ப மணிமாலை அணிதலும் சிவபிரானுக்கு உண்டென்பது உணர்த்தற்பொருட்டு, "மணி ஆரமார்பினானை" என்றருளினார்; "நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பர்க்குக் - கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்கு" (தி.5. ப.92. பா.2.) என்று அருளினார், திருக்குறுந்தொகையினும். திரிபுரம் எரிக்கச் சென்ற காலத்து, வேதங்களே சிவபிரானுக்குத் தேர்க் குதிரைகளாயின எனப் புராணங் கூறுதல் அறிக.

5. பொ-ரை: பொய்க்கலப்பற்ற மெய்ம்மை வடிவினனாய், புண்ணியனாய், பகைவர் மும்மதில்களும் சாம்பலாகுமாறு அம்பு