| உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை | | | ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே | | | திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச் | | | செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 8 |
| 2723. | நசையானை நால்வேதத் தப்பா லானை | | | நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் தன்னை | | | இசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை | | | இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின் | | | மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும் | | | மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத் | | | திசையானைத் திருவானைக் காவு ளானைச் | | | செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 9 |
செய்பவனாய், பூதகணமாகிய படையை உடையவனாய், சுடு காட்டில் கூத்தாடுதலை விரும்புபவனாய், பிச்சை ஏற்றலை ஆசைப்படுபவனாய், பவளத்திரள்போல என் உள்ளத்தில் விளங்குபவனாய், திருவானைக்காவுள் உறைபவனாய், உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே. கு-ரை: 'கச்சி ஏகம்பம் மகிழ்ந்தானை' என்பது கருத்தாகக் கொள்க; மகிழ்ந்தான் - விரும்பினான். ஏத்துதலை, வணக்கங் கூறுதலாக உரைக்க. பொன்னுலகம் - சிவலோகம்; அன்னதாதலை, மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் - பொன்னுலகம்பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்" (தி.7. ப.100. பா.5.) என்பதனானும் அறிக. ஆள்வித்தல் - அதன்கண் பெறும் இன்பம் எல்லாவற்றையும் நுகர்வித்தல். "பவளத் திரள்" என்பது, உவமையாகுபெயர். "உள்ளம்" என்றது, அறிவை. 9. பொ-ரை: எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனாய், நான்கு வேதங்களுக்கும் அப்பாற்பட்டவனாய், வறுமை மனநோய்கள் உடல்நோய்கள் ஆகியவற்றை நீக்குபவனாய்ப் புகழுக்கு உரியவனாய், எல்லையற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமாயவனாய், இடை மருதும் ஈங்கோயும் உறைவிடமாக உடையவனாய், காளைவாகனனாய், விரிந்த கடலும் ஐம்பூதங்களும் எட்டுத் திசைகளும் ஆகியவனாய், திருவானைக்காவுள் உறைவானாய், உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே.
|