| 2724. | பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப் | | | பண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணஞ் | | | சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத் | | | தேவர்கள் தம் பெருமானைத் திறமுன்னாதே | | | ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன் | | | ஆண்மையெலாங் கெடுத்தவன்தன் இடரப் போதே | | | தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச் | | | செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே. | 10 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை: நசையான் - விருப்பத்திற்கு உரியவன்; 'விரும்புதற்கு உரியவன்' என்றதாம். நல்குரவு - வறுமை. நோய் - துன்பம், 'நல்குரவு தீப்பிணிநோய்' என்னும் செவ்வெண்ணின் தொகை தொகுத்தல் ஆயிற்று. 'நல்குரவும்' என்பது பாடம் அன்று. இசையான் - பண்ணின் கண் உள்ளவன். இறைவனது குணத்தை 'எட்டு' என்றல், வகையால் அன்றி, விரியால் அன்மையின், அவை விரியால் எண்ணிறந்தனவாதல் உணர்க. இடைமருது, ஈங்கோய் சோழநாட்டுத் தலங்கள். 'நீங்காத' என்னும் எதிர்மறைப் பெயரெச்ச ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது. அவ்வெச்சம், "ஏற்றின்மிசையான்" என்னும் பெயரொடு முடிந்தது, செய்யுட்கேற்ப உம்மை தொகுத்தும், பிறவாறும் ஓதப்பட்டதாயினும், புனலும் காற்றும் திசையும் ஆகியானை' என்றே கொள்க: 'மிகுதல்' என்னும் அடை, "மாண்" முதலிய எல்லாவற்றிற்கும் ஆகும்; பெரும் பொருள்களாகிய அவை எல்லாம்' என்பது கருத்து. 10. பொ-ரை: மன்மதன் உடல் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவனாய், ஒருகாலத்தில் பிரமன் திருமால் இருவரும் தன்னை முடி அடி அறிய முடியாதவாறு தீப்பிழம்பாய் நின்றவனாய், தேவர்கள் தலைவனாய், தன்னுடைய வலிமையை நினைத்துப்பாராமல் ஆரவாரித்து ஓடிவந்து, கயிலை மலையை எடுத்த இராவணனுடைய ஆற்றலைப் போக்கிப்பின் அவன் துயரை அப்பொழுதே தீர்த்தானாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே. கு-ரை: 'வீழப் பார்த்தானை' எனக் கூட்டுக. சீர்த்தான் - உயர்ந்து தோன்றியவன். திறம் - வலிமை; என்றது, வினை வலியையும் தன் வலியையும். உன்னாதே - ஆராயாமலே. ஆர்த்து - ஆரவாரித்து.
|