64. திருக்கச்சி ஏகம்பம் பதிக வரலாறு: ஆண்டவரசு, தொண்டை நாட்டில் திருவோத்தூரை அடைந்து வணங்கித் தொண்டர் எதிர்கொள்ளக் காஞ்சி நகர் அடைந்து வலங்கொண்டு திருவேகம்பர்தமை வணங்கித் திருமாற்பேறு முதலாகிய பதிகளைத் தொழுது மீண்டணைந்து வணங்கி, "ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான்" என்று பாடியருளியது இத்திருப்பதிகம் (தி.12 திருநாவு. புரா. 328) குறிப்பு: இத்திருப்பதிகம், 'காண்' என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் கச்சி ஏகம்பப் பெருமானது இயல்பினை வகுத்தோதி, 'அத்தன்மையன் என் எண்ணத்தின் கண்ணாயினான்' என உருகி யருளிச் செய்தது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 277 | பதிக எண்: 64 |
திருச்சிற்றம்பலம் | 2725. | கூற்றுவன்காண் கூற்றுவனைக்குமைத்த கோன்காண் | | | குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண் | | | காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் | | | கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை | | | நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் | | | நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல் | | | ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே. | 1 |
1. பொ-ரை: உலகை அழிப்பவனாய், கூற்றுவனை அழித்த தலைவனாய், உலக காரணனாய், உலகில் நீரும் காற்றும் கனலும் ஒலிக்கின்ற மேகமும் அதன் மின்னலுமாகி, பவளச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்து, பிறைதவழும் சென்னியனாய், கங்கை வெள்ளத்தை நிமிர்ந்த சடைமேல் ஏற்றவனாய், அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கச்சி ஏகம்பத்திலுள்ள பெருமான் என் எண்ணத்தின்கண் ஆயினான். கு-ரை: சிவபிரானை, 'கூற்றுவன்' என்றல், அழித்தல் தொழிலை
|